ஆமதாபாத் :''பிரதமர் மோடி, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு, எந்த உதவியும் கிடைக்காது,'' என, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் கடாரா பேசியது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பதேபூர் தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் கடாரா, லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:இந்த முறை, யாரும் ஏமாற்ற முடியாது. ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், கேமரா பொருத்தி, பிரதமர் மோடிகண்காணித்து வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தது யார், காங்கிரசுக்கு ஓட்டளித்தது யார் என்பது தெரிந்து விடும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களுக்கு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்த உதவியும் கிடைக்காது.பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களுக்கு, நலத் திட்டங்களும் பெரிய அளவில் செயல்படுத்தப்பட மாட்டாது. எனவே, வாக்காளர்கள், சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இது, சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவருக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
வாசகர் கருத்து