மோடிக்கு உதவும் காங் : கெஜ்ரி தகவல்

புதுடில்லி : டில்லியில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்காமல், மோடி எதிர்பாளர்களின் ஓட்டும் மோடிக்கே விழுவதற்கு காங்., உதவுவதாக டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


டில்லி லோக்சபா தேர்தலுக்காக ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்., பல வழிகளிலும் முயற்சித்தது. பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. காங்.,ம் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து, வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.


இந்நிலையில் காங்., தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், டில்லியில் பா.ஜ.,வை படுதோல்வி அடைய செய்வதற்காக ஆம்ஆத்மி - காங் இடையே கூட்டணி அமைய வேண்டும். டில்லியில் ஆம்ஆத்மிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க காங்., தயாராக உள்ளது. இப்போது வரை எங்களின் கூட்டணி கதவு திறந்துள்ளது. ஆனால் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆம்ஆத்மி எந்த முடிவுக்கு வரவில்லை. கெஜ்ரிவால் மீண்டும் யூ டர்ன் போடுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு பதில் டுவிட் போட்டு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், காங்., தலைவர் பதிவிட்டுள்ள கருத்து, அவர்களின் கூட்டணி வெறும் நாடகம் என்பதையே காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக உ.பி.,யிலும் மற்ற மாநிலங்களிலும் நீங்கள் மோடிக்கு எதிரானவர்களின் ஓட்டையும் அவருக்கு விழும்படி செய்து, மோடிக்கு உதவுகிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)