வாகனத்தில் வலம் வந்துஆதரவு திரட்டினார் விஜயகாந்த்

சென்னை:பிரசார வாகனத்தில், சென்னை நகரில் வலம் வந்து, அ.தி.மு.க., கூட்டணிக்கு, விஜயகாந்த் ஆதரவு திரட்டினார்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு, அமெரிக்காவில், 60 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து, பிப்ரவரி, 16ல், அவர், சென்னை திரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.காத்திருப்புஅதனால், விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது. அவரது பிரசாரத்தை எதிர்பார்த்து, தே.மு.தி.க., வேட்பாளர்களும், அக்கட்சியினரும் காத்திருந்தனர்.


'விஜயகாந்த், நிச்சயம் பிரசாரம் செய்வார்' என, அவரது மனைவி பிரேமலதா கூறி வந்தார்.தேர்தல் பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், சென்னையில் மட்டும், நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார். பிரசார வாகனத்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து, வில்லிவாக்கம், கொளத்துார், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிகளில், விஜயகாந்த், நேற்றிரவு வலம் வந்தார்.


ஊர்வலம்


இரண்டு கைகளையும் உயர்த்தி கும்பிட்டு, மத்திய சென்னை, பா.ம.க., வேட்பாளர் சாம் பால், வட சென்னை, தே.மு.தி.க., வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். விஜயகாந்துடன், தே.மு.தி.க., தொண்டர்கள், இரு சக்கர வாகனத்தில், கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக வந்தனர். சில இடங்களில் மட்டும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு கேட்டு, அவர் ஓரிரு வார்த்தைகள் பேசினார். அவர், என்ன பேசினார் என, யாருக்கும் புரியவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)