கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம்

சேலம், : ''கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்ஏற்படுத்தப்படும்'' என, மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் பிரசாரத்தில் பேசினார். சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. முதல்வர், இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றனர். இதில், நிதின் கட்கரி பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணி கட்சி கள் சார்பில், போட்டியி டும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அனைத்து திட்டங்க ளையும் கொண்டு வந்து சேர்க்கிறோம்.

ஆந்திரா, கோதாவரி ஆற்றின் குறுக்கே, போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு, 1,100 டி.எம்.சி., நீர், கோதாவரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கிறது.அதை, விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன் படுத்த, கோதா வரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் அமலானால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும். கால்வாய் திட்டத்துக்கு மாற்றாக, 'பைப்லைன்' மூலம், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.இத்திட்டத்தில் நிலங்களை வழங்கும் விவசாயிகளுக்கு, சந்தை மதிப்பை விட கூடுதலாக பணம் வழங்கப்படுகிறது. இருந்தபோதும், உரிய நேரத்துக்குள் விவசாயிகளை அழைத்து பேசி, இத்திட்டத்தை கொண்டு வருவோம். அதில், முதல்வர், இ.பி.எஸ்., ஆர்வமாக உள்ளதோடு, தினமும், இது குறித்து என்னிடம் பேசி வருகிறார். திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, பா.ம.க., தரப்பு வழக்கு தொடர்ந்து, தடை வாங்கியுள்ளது. அக்கட்சி தலைவர் ராமதாஸ், நேற்று மேடையில் அமர்ந்திருந்தார். அவர் முன்னிலையிலேயே, அத்திட்டத்தை கொண்டு வருவோம் என, நிதின் கட்கரி பேசியது, ராமதாஸ் உள்ளிட்ட, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)