பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக டூ-வீலர் பிரசாரம்

திருத்தணி:பா.ம.க.,வேட்பாளரை ஆதரித்து, நேற்று, திருத்தணியில், இருசக்கர வாகனங்களில் சென்று ஓட்டு சேகரிக்கப்பட்டது.


அரக்கோணம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர், ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, நேற்று, திருத்தணி நகராட்சியில், நகர அ.தி.மு.க., சார்பில், இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.இதில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், பா.ம.க., மாவட்ட செயலர், மணி ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.


ஊர்வலத்தில், பா.ம.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நகரம் முழுவதும் ஓட்டு சேகரித்தனர்.அப்போது, அரக்கோணம், எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன். நகராட்சியில் குடிநீர் பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்போம் என. உறுதி அளித்து ஓட்டு சேகரித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)