கருணாநிதி மகள் மீது போலீசில் புகார்

சூளைமேடு:எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு ஓட்டு சேகரிக்க சென்ற பெண்களை, பணம் கொடுக்க முயன்றதாக கூறி மிரட்டியதாக, முன்னாள் முதல்வர், கருணாநிதியின் மகள் செல்வி மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சூளைமேடு, 108வது வார்டில், நேற்று காலை, தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி உட்பட, 30 பேர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, அதே பகுதியில், எஸ்.டி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த இரு பெண்கள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.


இதை பார்த்த செல்வி, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து, ஒரு பெண், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.


அதேபோல், தி.மு.க.,வினரும், எஸ்.டி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த அசினா பானு, ரிஸ்வானா என்பவர்கள் பணம் கொடுக்க முயன்றதாக, புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீதும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)