அமைச்சர் பிரசார வாகனம் மீது கல்வீச்சு விழுப்புரத்தில் பதட்டம்: போலீஸ் குவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் பெரியகாலனியில் அமைச்சருடன் பா.ம.க, வேட்பாளர் பிரசாரத்திற்கு சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து, வாகனம் மீது கல்வீசியதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் பெரிய காலனியில் அமைச்சர் சண்முகம், பா.ம.க., வேட்பாளர் வடிவேல் ராவணன் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை 11.45 மணியளவில் ஓட்டு சேகரித்தனர். அப்போது பா.ம.க.,வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பாதர்சார் வீதியின் குறுக்கே தள்ளுவண்டிகளை நிறுத்தி வழிமறித்தனர்.
பிரசார வேன் வந்ததும் உள்ளே பா.ம.க.,கொடியுடன் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேட்பாளரை கீழே இறங்கி நடந்துசெல்லுமாறு கூறியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் டி.எஸ்.பி., திருமால் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.அப்பகுதி மக்களிடம் போலீசார் சமாதானம் பேசிய பின், அமைச்சர் மற்றும் வேட்பாளர் சென்ற பிரசார வேன் அங்கிருந்து வேகமாக சென்றது. அப்போது பிரசார வாகனத்தை நோக்கி கல்வீசியதில் அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)