ஸ்டாலினை ஹிந்துக்கள் புறக்கணிக்க பிரசாரம்

மதுரை : 'ஹிந்துக்களுக்கு எதிராக தி.க., தலைவர் வீரமணி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, வி.சி.க., தலைவர் திருமாவளவன்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவர்களை தேர்தலில் ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்,' என ஹிந்து மக்கள் பாதுகாப்பு படை மதுரையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தது. இதன் தலைவர் எஸ்.கே.சாமி கூறியதாவது: ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை மற்றும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை கொச்சைப்படுத்தி வீரமணி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி, 'பிரதமர் மோடி மக்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி ஏமாற்றி நெற்றியில் நாமம், பட்டை போட்டுள்ளார்,' என ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாக தஞ்சாவூரில் பேசியுள்ளார். இது கண்டிக்கத் தக்கது. ஸ்டாலினுக்கு சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் கும்ப மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்து, நெற்றியில் குங்குமமிட்டனர். அதை உடனே அகற்றினார். இவர்கள் மதச்சார்பற்றவர்கள் எனில், அதே நிலையில் இருக்க வேண்டும். வேறு சில மதங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

திருமாவளவன் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் மற்றும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.தொடர்ந்து ஹிந்து விரோத கருத்துக்களை தெரிவித்து, மலிவான அரசியல் செய்யும் இதுபோன்ற திராவிட கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். பணத்திற்காக வாக்கை விற்கக்கூடாது. தகுதியானவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம், என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)