தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

''காங்., - தி.மு.க.,வின் வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என, தேனி, ராமநாதபுரம் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பேசினார்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். மைதானத்தில் வெப்பமும் அதிகம்; உங்கள் உற்சாகமும் அதிகம். உங்களை பார்க்கும் போது, 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என தோன்றுகிறது.
ராணுவத்தினர் முதல் விவசாயிகள் வரை, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, கண்ணியம், வளத்தை கொண்டிருக்கிற புதிய இந்தியாவை உருவாக்க, நாம் கனவு காண்கிறோம். ஆனால், காங்., - தி.மு.க., கூட்டணியால், இந்த வளர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை. ஏற்று கொள்ளவில்லைகடந்த, 1976ல், காங்கிரசால், தி.மு.க., அவமானப்படுத்தப்பட்டது. இன்று, அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. '2 ஜி' ஊழலில், தி.மு.க., தலைவர்கள் சிறையில் இருந்தனர். அப்போது, காங்., தலைவர்களை விமர்சனம் செய்தனர். தற்போது, ஊழலுக்கு ஆதரவாக, மோடிக்கு எதிராக, ஒன்று சேர்ந்துள்ளனர்.சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தன் எஜமானை - ராகுலை, பிரதமராக முன்மொழிந்தார்.

ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.தி.மு.க., - காங்., கூட்டணியில் உள்ள தலைவர்கள் கூட, அதை ஏற்கவில்லை. கூட்டணியில் அனைவரும், தாங்கள் தான் பிரதமர் என வரிசையில் காத்திருக்கின்றனர்.மத்திய ஆட்சியில், தந்தை நிதி அமைச்சராக இருந்தார். மகன், நாட்டை கொள்ளையடித்து கொண்டிருந்தார். தி.மு.க., சிறுபிள்ளைத்தனமான காரியங்களை செய்து, மக்களை திசை திருப்புகிறது. ஆனால், உங்கள் காவலாளியான நான், உஷாராக உள்ளேன். அவர்கள் திருட்டுத்தனம் செய்தால், இந்த காவலாளியால் பிடிக்கப்படுவர். காங்., - தி.மு.க., வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அனைவருக்கும் நிதி, நியாயம் கிடைக்க வேண்டும் என, காங்., கட்சியினர் பேசுகின்றனர். 1984ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யார் நியாயம் வழங்குவர் என, காங்கிரசை கேட்கிறேன்.நடவடிக்கைஎம்.ஜி.ஆர்., அரசை, ஒரு குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என, காங்., கலைத்ததே... அதற்கு யார் நியாயம் வழங்குவர் என காங்கிரசை கேட்கிறேன்.இந்த பகுதி விவசாயிகளின், நீர்ப்பாசன பிரச்னை குறித்து, நன்றாக தெரியும். கங்கை போல வைகையை சீர்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இந்த மாவட்டம் வழியாக, சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரைவாக சென்று, தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


அப்துல் கலாம், கனவுகளை நனவாக்கி, இந்தியாவை புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும். 'மிஷன் சக்தி' மூலம் செயற்கைக் கோளை நாம் தாக்கி அழித்த செயலை, அப்துல் கலாம் இருந்திருந்தால், கண்டு மகிழ்ந்திருப்பார்.இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, மருத்துவ காப்பீடு இல்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், 50 கோடி பேருக்கு, மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு, உயர் தர சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது, 130 கோடி மக்களின் ஆசியால் நடந்தது.பாம்பனில், 100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம், சிறப்பு மிக்க பாலமாக மாற்றப்பட உள்ளது. மே 23ல் மீண்டும் பொறுப்புக்கு வரும் மோடி அரசு, 'ஜல்சக்தி திட்டம்' மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும்.பதிலடி கொடுப்போம்காங்., - தி.மு.க., - முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, நாட்டைப் பற்றி தொலைநோக்கு பார்வை இல்லை; அது கலப்பட கூட்டணி. மோடியின் மீது வெறுப்புடன் இருக்கின்றனர். மோடியை வெறுப்பதாக, நாட்டையே வெறுத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நாட்டை பாதுகாக்க முடியாதவர்களால், நாட்டை முன்னேற்ற முடியாது. காங்., ஆட்சியில் பயங்கரவாத செயல்கள் நடந்த போது, அமைதியாக இருந்தனர். காலம் மாறிவிட்டது. ஜிகாதி பங்கரவாதிகள் தாக்கினால், அவர்களை தேடி, தக்க பதிலடி கொடுப்போம்.நாம், இந்திய பண்பாடுகளை மதிப்போம்; பெண்களுக்கு மதிப்பளிப்போம்.

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இருந்த, முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது. நமக்கு நாடு தான் முதன்மை; அவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் என, செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில், வடக்கு - தெற்கு என்ற வேற்றுமையை உருவாக்கினர். காங்., - தி.மு.க., - முஸ்லிம் லீக் கூட்டணிக்கு ஓட்டு போடுவது, பயங்கரவாதத்திற்கு துணை போவதற்கு சமம்.இவ்வாறு அவர் பேசினார்.ராகுலுடன் கூட்டணியா?ஆண்டிப்பட்டி பிரசார கூட்டத்தில், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பால், இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.

அடித்தட்டு மக்கள் செழிப்பாக வாழ, மோடி திட்டங்கள் தான் காரணம். '2 ஜி' ஊழல் மூலம், நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய, தி.மு.க.,வுக்கு, ஊழலை பற்றி பேச தகுதியில்லை. கர்நாடகாவில் ராகுல், 'மேகதாது அணை கட்டப்படும்' என அறிவித்துள்ளார். அந்த அணை கட்டப்பட்டால், நமக்கு காவிரியில், ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. அங்கு அணை கட்டுவதாக அறிவித்த ராகுலுடன், கூட்டணி வைத்து உள்ள, ஸ்டாலினுக்கு, பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசுகையில், ''உலக நாடுகளால் புகழப்படும் பிரதமராக, மோடி உள்ளார். அவரது ஆட்சியில் மதக்கலவரம் இல்லை. பயங்கரவாத தாக்குதல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக நிற்பர்,'' என்றார்.காலில் விழுவதை தடுத்த மோடி பிரதமர் மோடிக்கு, மீனாட்சி அம்மன் சிலையை, துணை முதல்வர் பரிசளித்தார். மோடி பேசுவதற்கு முன் அவருக்கு மரியாதை செய்த, வேட்பாளர்கள், ரவீந்திரநாத் குமார், ராஜ் சத்யன், ஜோதி முத்து, லோகிராஜன், மயில்வேல், அவரது காலில் விழுந்து வணங்கினர். அவர்களை தடுத்து, விழக்கூடாது என பிரதமர் கேட்டு கொண்டார்.

தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துக்கள்பிரதமர் மோடி பேச்சை துவங்கிய போது,'இந்த நாள் சிறப்பு மிக்க ராமநவமி நாள். நான் காசியின் எம்.பி..,யாக அதனோடு தொடர்புடைய ராமநாதபுரத்திற்கு வந்துள்ளேன். ஆயிரம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்கது ராமநாதபுரம். இது அப்துல்கலாம் மண். இங்கு வருவதில் எனக்கு பெருமை,' என்றார்.* பேசி முடிக்கும் போது,' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்; அட்வான்ஸ் ஈஸ்டர் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டார்.* ராமநவமியை முன்னிட்டு மோடிக்கு வில், அம்பு பரிசை பா.ஜ., தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

மோடியின் பேச்சில் ஓரிடத்தில் கூட ராகுல் என்ற பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக காங்., தி.மு.க., முஸ்லிம் லீக்., கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடினார்.ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நினைவுச் சின்னம்மோடி பேசும் போது தனது ஆட்சியில் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமிற்கு உலகத்தரத்திற்கு நினைவிடம் அமைத்ததை பெருமையாக குறிப்பிட்டார்.அவர் கூறுகையில், 'தலைநகர் டில்லியில் பல இடங்களில், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நினைவிடங்கள் உள்ளன. நாட்டின் பல இடங்களில் அந்த குடும்பத்தினர் பெயரில் சாலைகள் உள்ளன. ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் ஆர்.வெங்கட்ராமன், கேரளாவின் ஆர்.கே.நாராயணன் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள் தான்!ஆனால், நாம் கலாமிற்கு உருவாக்கியது போன்று, யாருக்காவது காங்கிரஸ் அரசு நினைவுச் சின்னங்களை உருவாக்கியுள்ளதா' என்றார்.விளையாடும் காங்.,-கம்யூ.,மோடி பேசுகையில், 'கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சபரிமலை கோயில் விவகாரத்தில் விளையாடுகின்றன. நம் நம்பிக்கையை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மோசமான சக்திகளின் இந்த முயற்சி பா.ஜ., என்ற கட்சி இருக்கும் வரை நடக்காது. நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.


கருணாநிதி ஆட்சியை கலைத்தது காங்.,'மோடி சர்வாதிகார ஆட்சி செய்கிறார்' என்று ஸ்டாலின் பேசிவருவதற்கு பதிலடியாக, நேற்று மோடி பேசுகையில், ''மாநிலங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மாநில அரசுகளை காங்கிரஸ் பல முறை கலைத்துள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை, ஏன் கருணாநிதி ஆட்சியை கூட கலைத்தது காங்கிரஸ் தானே. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும் காங்கிரசால் முன்பு கலைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)