திருமாவளவன் பிரசாரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

புவனகிரி : சிதம்பரம் லோக்சபா தொகுதியில், வி.சி., வேட்பாளர் திருமாவளவன், ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சோழ நகர் பகுதியில், நேற்று முன்தினம் ஓட்டு சேகரிக்க சென்ற, பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் ஓட்டு சேகரிக்க செல்லும் கட்சி தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், போதிய பாதுகாப்பு வழங்க, எஸ்.பி., சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிரசார இடங்களில், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன், நேற்று கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளில், ஓட்டு சேகரித்தார்.அவர் ஓட்டு சேகரிக்கும் இடங்களில்,போலீசார், முன்கூட்டியேசென்று விசாரித்து, சந்தேகப்படும் இடங்களில், கூடுதல் பாதுகாப்புவழங்குகின்றனர்.திருமாவளவன் செல்லும் வாகனத்திற்கு முன்னும், பின்னும், போலீசார் உடன் செல்கின்றனர். கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனமும், வீடியோகிராபரும் உடன் செல்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக, கடலுாரில் இருந்து, ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.'தி.மு.க., காரன் நான்'கடலுார் மாவட்டம், சிதம்பரம் கீழ வீதியில், தி.மு.க., தலைவர்ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது:'ஹிந்து சமூகத்திற்கு எதிரானவன், வன்னியர்களுக்கு எதிரானவன் திருமாவளவன்' என, அவதுாறு பரப்புகின்றனர்.
அப்படி ஒருபோதும் நான் நடந்ததில்லை.மறைந்த முதல்வர் கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி அக்கட்சியுடன், பழகி வருகிறேன். தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)