ஊழலுக்கு உறுதுணையாக தி.மு.க., ச.ம.க., தலைவர் சரத்குமார் சாடல்

விருதுநகர்:"ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.,தான்" என, ச.ம.க.,தலைவர் சரத்குமார் பேசினார்.விருதுநகரில் தே.மு.தி.க ., வேட்பாளர் ஆழகர்சாமியை ஆதரித்து அவர் பேசியதாவது:


பிரதமர் மோடியை பிரதமாக்குவதற்காக அ.தி.மு.க., உருவாக்கி உள்ள இந்த மெகா கூட்டணி வெற்றிக்கூட்டணி. மத்தியிலே வலுவான ஆட்சி இருந்தால் தான் நம் உரிமை, திட்டங்களை கேட்டு பெற முடியும். தற்போது நாம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல்களை சந்திந்து வருகிறோம். அதற்கு பதிலடி கொடுக்கும் திறமையான பிரதமராக மோடி இருக்கிறார்.


தி.மு.க., காங்., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ராகுல் உத்தரபிரதேசம் அமேதி, கேரளா வயநாட்டில் போட்டியிடுகிறார். உத்தரபிரதேசத்தில் கம்யூ.,வுடன் கூட்டணியிலும், கேரளாவில் எதிர்த்தும் நிற்கிறார். இது தான் சந்தர்ப்பவாதம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., நிலக்கரி, 2 ஜி, ஹெலிகாப்டர், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் ஊழல் செய்தது. ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.,தான், என்றார்.


சிவகாசி : திருத்தங்கல் , சிவகாசி பகுதியில் பேசியதாவது: தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கூட்டணி தி.மு.க., கூட்டணி . கடந்த காலங்களில் பா.ஜ., மற்றும் காங்., ல் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் இடம் பிடித்த தி.மு.க., மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க.,கொள்ளையடித்த பணத்தை இங்கிருந்து போட்டால் சென்னை வரும் நீளும்,என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)