தொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேரு காரணம்:சரத்குமார் பேச்சு

ஆர்.எஸ்.மங்கலம்:தொடரும் காஷ்மீர் பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பேசினார்.ராமநாதபுரம் லோக்சபா தொகு தி பா.ஜ., வேட்டாளர் நயினார் நாகேந்திரை ஆதரித்து ஆர்.எஸ்.மங்கலத்தில் அவர் பேசியதாவது:


மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதை ஏற்று கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., உள்ளிட்ட எதிர் கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த போது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை வல்லரசாக்க முற்பட்ட நிலையில், நேரு காஷ்மீரை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி இன்று வரை காஷ்மீரை பிரச்னைக்கு உரிய பகுதியாகவே காங்., வைத்துள்ளது.


கச்சதீவு பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க.,வே காரணம். ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய தற்போது ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார். ஏன் காங்., ஆட்சியில் இருக்கும் போது அவர்களை விடுதலை செய்ய ஸ்டாலின் முன்வரவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


எனவே தாமரை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் பிரபு, ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, அவைத் தலைவர் ராமநாதன் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)