நிஜாமாபாத் தொகுதியில், 'கின்னஸ்' சாதனை

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில், 185 வேட்பாளர்கள் போட்டியிட்ட, நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், அதிகமான மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது, கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, 17 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது.185 வேட்பாளர்கள்இதில், நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட, 185 பேர் போட்டியிட்டனர்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் போட்டியிட்டதால், வேட்பாளர் எண்ணிக்கை அதிகரித்தது. நிஜாமாபாத் தொகுதியில், 12 மின்னணு இயந்திரங்களில், 185 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன; இவை அனைத்தும், ஒரு பிரதான இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு, ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி, ரஜத் குமார் கூறியதாவது:ஒரு மின்னணு இயந்திரத்தில், 24 வேட்பாளர் விபரங்கள் வரை பதிவு செய்ய முடியும். ஆனால், நிஜாமாபாத் தொகுதியில், 185 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், மின்னணு இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிதாக, 27 ஆயிரம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில், வேட்பாளர்கள் அனைவரது பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு, ஒரு பிரதான இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது.

சிறப்பு பயிற்சிஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், தலா, 12 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இயந்திரத்திலும், 16 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து, ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கூடுதலாக இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில், 12 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, கின்னஸ் புத்தகத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து, இயந்திரங்களை பார்வையிட்டு சென்றனர்.அதிக அளவிலான மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஓட்டுப்பதிவு சுமுகமாக நடந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)