தோற்றுப் போனதா தேர்தல் பத்திர திட்டம்

புதுடில்லி: கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்காததும், அனைத்து கட்சிகளும் தாங்கள் பெற்ற நிதி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் உத்தரவிட்டது, பிரதமர் மோடிக்கு நிம்மதியை தந்துள்ளது.

மே 30ம் தேதிக்குள் கட்சிகள், நிதி தந்தவர்கள் யார், எவ்வளவு தந்தார்கள் போன்ற விபரங்களை மூடிய உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன
தேர்தல் நிதியை கட்சிகளுக்கு பத்திர வடிவில் தருவது தான் தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பத்திரங்களும் பா.ஜ.,வுக்கு தான் அதிகம் கிடைத்துள்ளது.ஏனெனில் மற்ற கட்சிகள் எல்லாம், தேர்தல் நிதியை வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லாமல் ரொக்கமாக வாங்குகின்றன.

2017-18 ல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு ரூ.210 கோடி நிதி வந்தது. ஆனால் மற்ற கட்சிகளுக்கு ரூ.11 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமானவர் வீட்டிலும், ம.பி., முதல்வர் கமல்நாத் உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஹவாலா மூலம் பல கோடி ரூபாய் கைமாறியது இவர்கள் மீது புகார்கள் இருந்தன.


தேர்தல் பத்திர அறிமுகம்
பல்வேறு நிதிச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, 2018, ஜன.12ல் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பத்திரங்களை யார் வேண்டுமானாலும் ஸ்டேட் வங்கியிடம் இருந்து வாங்கலாம். யார் வாங்குகின்றனர் என்பது வங்கிக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிதி தருவோர் வரியும் செலுத்த வேண்டும். நிதி பெறும் கட்சிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். தேர்தல் பத்திரம் மூலம் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் நிதி கிடைத்தால் அதை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்த வேண்டியது இல்லை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் முதல் 10 நாட்கள் மட்டும் இந்த பத்திரங்களை வாங்க முடியும். வாங்குபவர் தங்களைப் பற்றிய விபரங்களை ஸ்டேட் வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆயிரம் ரூபாய், ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகியவற்றின் மடங்குகளில் தான் பத்திரங்களை வாங்க முடியும்.பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை வருமான வரி தாக்கல் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கட்சிகள் தெரியப்படுத்த வேண்டும்.

வழக்கு ஏன்
கடந்த 2018 பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி தான் முதலில் வழக்கு தொடர்ந்தது. கிடைத்த நிதி எவ்வளவு என்று தெரியப்படுத்த வேண்டியது இல்லை என்ற சட்டப்பிரிவால் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும் என்று வழக்கில் அக்கட்சி குறிப்பிட்டிருந்தது.


சட்டத்தில் நிதி பெற்ற கட்சிகளின் பெயரை வெளியிட வேண்டும் என்ற சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையும் அக்கட்சி கேள்வி கேட்டிருந்தது.

மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, தேர்தல் பத்திரங்களால் கட்சி நிதி விஷயத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் வந்துவிடவில்லை.
நிதி தருவோரின் தனிப்பட்ட தகவல்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான் யார் எந்த கட்சிக்கு நிதி அளித்தனர் என்று வெளியே சொல்லத் தேவையில்லை என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. நிதி அளிப்போரின் பெயர் வெளியிடப்பட வேண்டும் என்று சொன்னால், தேர்தல் பத்திர திட்டத்தில் அவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள் என்றும் மத்திய அரசு கூறியது.

ஆனால் சுப்ரீம் கோர்ட், இத்திட்டத்தால் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்ற மத்திய அரசின் கருத்தை ஏற்க மறுத்துவிட்டது. பெயர்களை ரகசியமாக வைத்தாலே கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)