பா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க்

மும்பை : பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.

பா.ஜ., தேர்தல் அறிக்கை தொடர்பாக சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில், நாட்டு மக்களின் மனங்களில் உள்ள உணர்வே பா.ஜ.,வின் சங்கல்ப் பத்ரா (பா.ஜ., தேர்தல் அறிக்கை) உள்ளடக்கி உள்ளது. சிவசேனாவின் கோரிக்கைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளுக்காக நாங்கள் அதற்கு 100 க்கு 200 மார்க்கள் கொடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் அது இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்கும் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுக்கும். காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி மிரட்டல் விடுத்ததற்கும் சாம்னாவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட்டால் அதற்கு பிறகு காஷ்மீரில் யார் இந்திய கொடியை ஏற்றுகிறார்கள் என பார்க்கிறேன் என பரூக் அப்துல்லா மிரட்டுகிறார். அவர்களின் நாக்கை வெட்ட வேண்டும்.

பாக்.,கிற்கு எதிரான பா.ஜ.,வின் துணிச்சலான நடவடிக்கைகாக அக்கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். விவசாயம், வறுமை, சிறு வியாபாரிகள், கல்வி ஆகியவற்றிற்கு பா.ஜ., தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சாம்னாவில் புகழப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)