மீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்

இஸ்லாமாபாத் : மீண்டும் பிரதமர் மோடி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இரு நாட்டு தரப்பு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

சர்வதேச பத்திரிகைக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், மோடி தலைமையிலான பா.ஜ., வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் . மீண்டும் 5வது பிரதமராக வெற்றிபெற்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் நேதன் யாகுவைப் போன்றே,இந்தியப் பிரதமர் மோடியும் தேசிய உணர்வுகொண்டவர் என்பதால், அமைதிப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் என்று பாக்.,பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை இந்தியாவில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்க உள்ள நிலையில், இம்ரான்கானின் கருத்து சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)