'தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்'

திருப்பூர் : ''வயநாடு தொகுதியில், ராகுல் போட்டியிடுவது பெரும் தவறு; தேர்தலுக்குப்பின் தான், பிரதமர் தேர்வு செய்யப்படுவார்,'' என, இ.கம்யூ., தேசிய செயலர் சுதாகர் ரெட்டி, திருப்பூரில் பேட்டி அளித்தார்.திருப்பூரில் நேற்று, இ.கம்யூ., தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அவர் அளித்த பேட்டி:பா.ஜ.,வுக்கு எதிராக, பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், ராகுலை பிரதமர் வேட்பாளர் என, சிலர் முன்னிலைப் படுத்துகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின், கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து, பிரதமர் முடிவு செய்யப்படுவார்.ராகுல் பிரதமர் ஆகவும் வாய்ப்புள்ளது.
ஆனால், அதை உறுதியாக இப்போதைய சூழ்நிலையில் கூற முடியாது. வயநாட்டில் அவர், போட்டியிட முடிவு எடுத்தது, பெரும் தவறு. அவர் யாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.தமிழகத்தில், ஆளுங்கட்சி, அ.தி.மு.க., வை மிரட்டி, பா.ஜ. கூட்டணி அமைத்துள்ளது.'புல்வாமா' தாக்குதல் சம்பவம், உரிய முன்னெச்சரிக்கை இல்லாத காரணத்தால் நேர்ந்துள்ளது.
நாட்டின் ராணுவத்தை, மோடி தன் ராணுவம் என்பது போல், பேசுகிறார். அவர் கட்சியினரும் அதை வழிமொழிகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.'ஒப்பந்த விவசாய சட்டம் ரத்து, பால் கொள்முதல் முறையில் மாற்றம், தேர்தல் முறையில் சீர்திருத்தம்' என, இ.கம்யூ., நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)