தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றும், வி.சி., கட்சியினரை பிரசாரத்துக்கு அழைக்காமல், கொ.ம.தே.க., கழற்றி விட்டுள்ளது.நாமக்கல் லோக்சபா தொகுதியில், கொ.ம.தே.க., சார்பில், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., சேர்வதற்கு, அக்கட்சியினர் மற்றும் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான, வி.சி.,க்கும், கொ.ம.தே.க.,வுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. வி.சி., இருக்கும் கூட்டணியில், கொ.ம.தே.க., இடம் பெறக்கூடாது என்பதே, அக்கட்சியில் பெரும்பாலானவர்களின் கருத்து. அதையும் மீறி, கூட்டணியில் இடம் பெற்று, தொகுதியும் பெற்றுள்ளனர். தற்போது, பிரசாரம் நடந்து வருகிறது. பிரசாரத்தில், வி.சி., கட்சியினருக்கு தகவல் தராமல் இருப்பதுடன், அவர்களை அழைக்காமல், கொ.ம.தே.க.,வினர் கழற்றி விடுகின்றனர்.செயல்வீரர்கள் கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம் என, எதற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை, கொ.ம.தே.க.,வும், தி.மு.க.,வும் அழைக்கவில்லை. இது, வி.சி., நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து