பா.ஜ.,வில் தனிநபர் வழிபாடு: சத்ருஹன் சின்கா

புதுடில்லி : பா.ஜ.,வில் எல்லாமே மோடி, அமித்ஷா என பெயர் குறிப்பிடாமல் இந்தி நடிகர் சத்ருஹன் சின்கா பேசி உள்ளார். பா.ஜ., சார்பில் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்தவர் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருஹன் சின்கா (72). இந்த முறை இவருக்கு பா.ஜ., சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சத்ருஹன் சின்கா, கடந்த சில நாட்களாக பா.ஜ.,விற்கு எதிராக பேசி வந்ததுடன், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
பா.ஜ.,வில் இருந்து விலகிய இவர் இன்று டில்லியில் காங்., மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். காங்.,கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே பாட்னா சாஹிப் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட சத்ருஹன் சின்ஹாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருஹன் சின்கா, பா.ஜ.,வில் எல்லாமே தனிநபர் துதிதான்.பிரதமர் அலுவலகம் தான் எல்லாமே செய்யும். பா.ஜ., one-man show, two-man army ஆகி வருகிறது. அமைச்சர்கள் தானாக எதையும் செய்ய முடியாது. ஜனநாயகம், சர்வாதிகாரமாக மாறி வருவதை நாம் காண முடியும். மூத்த தலைவரான அத்வானி ஒரு கூட்டத்திற்கு கூட அழைக்கப்படுவதில்லை. இதே நிலை தான் ஜஷ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா போன்றவர்களுக்கும். இதை நான் கூறியதற்கும், விமர்சித்ததற்கும் தான் எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.பணமதிப்பிழப்பு தான் உலகின் பெரிய ஊழல். யோசனை இல்லாத இந்த முடிவால் பலரும் உயிரிழந்துள்ளனர். நாட்டை விட கட்சி பெரியதல்ல. கட்சியை விட தனிநபர் பெரிதல்ல என நான் அவர்களுக்கு விளக்க முயற்சித்தேன். இதை நான் சொன்னதற்கு தான் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துபவன் என முத்திரை குத்தப்பட்டது என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)