'சார், கார்... டில்லி சர்கார்' தெலுங்கானா புது கோஷம்

தெலுங்கானாவின், லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் வளர்ச்சியும், மத்தியில் கூட்டாட்சியும் வேண்டும் என, ஆளும் கட்சி பிரசாரம் செய்கிறது. இதற்காக, 'சார் கார், டில்லி சர்கார்' என, தெலுங்கானாவில் புதிய கோஷம் எழுப்பப்படுகிறது.


ஆந்திராவில், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 11ல் தேர்தல் நடக்கிறது. இதில், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங், - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.தெலுங்கு தேசத்துக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.


தெலுங்கானாவில், 17 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்.,11ல் தேர்தல் நடக்கிறது. அங்கு, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ் மற்றும், பா.ஜ., கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. போட்டியிலிருந்து, தெலுங்கு தேசம் விலகியுள்ளது.ஐதராபாத் தொகுதிக்கு மட்டும், தெலுங்கானாவின் நட்பு கட்சியான, 'அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாத்துல் முஸ்லிமின்' சார்பில், அதன் தலைவர், அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.


தெலுங்கு பேசும் மக்களுக்கான, இரண்டு மாநிலங்களிலும், ஆளும் கட்சிகள் தங்களை நிலை நிறுத்த, பல்வேறு பிரசார வியூகங்கள் வகுத்துள்ளன.தெலுங்கானாவில், மாநிலத்தின் வளர்ச்சியே குறிக்கோள் என, முதல்வர் சந்திரசேகரராவின், டி.ஆர்.எஸ்., கட்சி தீவிர பிரசாரம் செய்கிறது. டி.ஆர்.எஸ்., கட்சியின், கார் சின்னத்தை மையப்படுத்தி, 'சார்... கார்; டில்லியில் சர்கார்' என, கோஷமிடுகின்றனர்.


தேர்தலில் பெறும் வெற்றியை வைத்து, மத்திய ஆட்சியை நிர்ணயம் செய்ய, இரண்டு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. மம்தா பானர்ஜி, ஆந்திராவின், ஒய்.எஸ்.ஆர்., ஜெகன்மோகன் மற்றும் ஒடிசாவின், நவீன் பட்நாயக் கட்சிகளை இணைத்து, மூன்றாம் அணியை உருவாக்க, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.தேர்தலில் வென்றால், நாங்கள் தான் பிரதமரை முடிவு செய்வோம் என, சந்திரசேகர ராவின் மகன், ராமா ராவ் கூறியுள்ளார்.


ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, காங்., கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, மத்தியில், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கி வருகிறார்.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதை முக்கிய கொள்கையாக, சந்திரபாபு நாயுடு அறிவித்து, லோக்சபா தொகுதிகளை குறி வைத்து உள்ளார்.


அனைத்து வாக்காளர்களுக்கும், இலவச மொபைல் போன் வழங்குவது, வேலை இல்லாதவர் களுக்கு உதவி தொகை, விவசாயிகளுக்கு நிதி உதவி, சமூக பாதுகாப்பு பென்ஷன் திட்டம் உள்பட, பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து, ஆட்சியை தக்க வைக்க, சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.


காங்., கட்சியும், பா.ஜ.,வும் வட மாநிலங்களில் ஹிந்துத்துவா, சிறுபான்மையின பாதுகாப்பு, ஹிந்தி திணிப்பு, மத பிரச்னை போன்றவற்றை வைத்து, பிரசாரம் செய்து வருகின்றன.ஆனால், தெலுங்கு மாநிலங்களில் மட்டும், இரண்டு மாநில ஆளும் கட்சிகளும், மாநிலங்களின் வளர்ச்சியே, மத்திய கூட்டாட்சிக்கான வழி என்பதை, தேசிய கட்சிகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)