/ செய்திகள் /  பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழகம், சீரழிந்து போனதற்கு, தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சி தான் காரணம். கிராமங்களில் கூட, போதை பொருள் இருக்கிறது. ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், புகார் அளிக்க சென்றபோது, ஏழு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டது, காவல்துறையின் மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல், மக்களின் புகார்களை விசாரித்து குற்றங்களை தடுக்க வேண்டும். - காடேஸ்வரா சுப்ரமணியம் தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்