லேப்டாப் எங்கே? தேடும் எம்.எல்.ஏ.,க்கள்
சட்டசபையில், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவருக்கும், டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தின் கீழ், சட்டசபை செயலகம் சார்பில், லேப்டாப் வழங்கப்பட்டது. இதனை, பலர், தங்கள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி விட்டு, பின், பழுது காரணமாக ஓரம் கட்டி விட்டனர். தற்போது, தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பெயரில் எந்தவித அரசு பொருளும் இல்லை என்பதை, வேட்பு மனுவில் குறிப்பிட்டு அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், தங்கள் அலுவலகங்களை அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால், சட்டசபை செயலகம் வழங்கிய லேப்டாப்பை மறந்தே விட்டனர். தலைமை செயலகத்தில் 'நிலுவையில்லா சான்று' கேட்டபோது, 2021ல் வழங்கிய லேப்டாப்பை கொண்டு வந்தால் மட்டுமே சான்று வழங்கப்படும் என பதில் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பல எம்.எல்.ஏ.,க்கள், லேப்டாப்பை வீட்டில் எங்காவது வைத்தோமா அல்லது உற்றார், உறவினர்களிடம் கொடுத்தோமா என தேடி வருகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Laptops can be permanently handed over to MLAs after deducting depreciation amount 20% per year from original purchase price. Balance amount can be paid by MLA for retaining laptops.
அதே சீரியல் நம்பர் உடைய லேப்டாப்பை திரும்ப ஒப்படைக்காத நபர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்..
வித்து தின்னுருப்பானுங்கோ. நரி வயிற்றில் போன கோழி கூவி நாம என்னிக்கு எழுந்திருக்கிறது? எல்லாம் காச கட்டி சான்றிதழ்கள் வாங்கி சோலிய முடிச்சுடுவானுங்கோ
இவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்ய போகிறார்கள். காலத்தின் கோலம். கடவுள்தான் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.