காங்கிரசை மடக்கிய விஜய் விவாகரத்து விவகாரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நமது நிருபர்
'இந்த தேர்தலில், 41 தொகுதி கள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆட்சியில் பங்கு' என்பதில் காங்கிரஸ் மேலிடம் விடாப்பிடி யாக இருந்ததும், த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க, காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டதும், தி.மு.க.,வை கோபப்படுத்தி யது. இதனால், துவக்கத்தில் காங்கிரசுடன் பேசுவதை, தி.மு.க., தள்ளிப்போட்டு வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க.,வுடன் பேசுவதை காங்கிரசும் தாமதப்படுத்தியது.கடந்த 26 தேதி இரவு செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்ட டி.ஆர்.பாலு, 27ம் தேதி பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த தகவலை, ஊடகங்களுக்கு தமிழக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், 27ம் தேதி மாலை த.வெ.க., தலைவர் விஜய் மனைவி விவாகரத்து கேட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றிய தகவல் வெளியானது. அதன்பின்னரே, தி.மு.க.,வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த, காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்து உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், விஜய் மனைவி தாக்கல் செய்த மனு, திடீரென நேற்று முன்தினம் வெளியானதன் பின்னணியில் தி.மு.க., இருப்பதாகவும், காங்கி ரஸ் மேலிடத்தை வழிக்கு கொண்டு வர, இதை துருப்புச் சீட்டாக பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 38 )
பெண்களை பற்றி பேச எந்த தி மூ கா காரனுக்கும் அருகதை இல்லை.
நடிகர் விஜய்யின் விவாகரத்து விஷயம் இப்பொதுத்தேர்தலை ஒட்டி வரகாரணமே திராவிட மாடல் அரசின் சூழ்ச்சிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பே விஜய்யின் மனைவி ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர் இறந்ததற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னை வந்திருந்தார் அப்போதே இது தொடக்கம் ஆகிவிட்டது ஆளும் கட்சியின் பிரமுகரின் அக்காதான் எல்லாவற்றிற்கும் காரணமாம் அவருக்கும் விஜய் மனைவி எட்டிய சொந்தமாம் அதை தேர்தல் சமயத்தில் பயன் படுத்திக்கொண்டுதான் இந்த அமக்களமே ஆரம்பம் ஆகியுள்ளது இனி போக போக முழு விவரம் வெளிவரும்
திருடனுக்கு தேள் கொட்டின கதை ஆச்சி காங்கிரஸ் கதை.....
இதே வேலை தான சீமானுக்கும் பார்த்தானுங்க
useless
தில்லங்கடி வேலை பண கொழுப்பு.
சரியாக தேர்தல் நேரத்தில் விசாணையும் வருகிறது. பெண்களின் ஓட்டுகளை பிரிப்பதற்கான சூழ்ச்சி போல் தெரிகிறது. அரைத்த மாவையே அரைக்கும் மழுங்கிப்போன திராவிட சிந்தனை. தமிழக மக்களே அவர்களுக்கு விடைகொடுங்கள்.
பல ஆண்டுகள் முன் இதே போன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை, அறிவாலயத்தில் CBI/ED பயன்படுத்தி திமுக சார்ந்த நிறுவனங்களை, சோதனைக்கு உட்படுத்தி, தி மு க விடம் தொகுதி உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுத்து தேவையான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று தேர்தலை சந்தித்தனர். அதே போன்ற ஒரு நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இயற்கையின் சுழற்சி இது தான். ஆனால், இதே திமுக, மத்திய அரசு அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகளை மிரட்டுவதாக புகார் கூறுகிறது.
ஏற்கனவே அந்த நடிகரின் செயல்கள் திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு கரூர் சம்பவத்திற்கு பிறகு பரவலாக எழுந்தது. தன் பெற்றோரிடமே பேச்சு வார்த்தை இல்லாத அளவிற்கு மனநிலை குறைபாடு உள்ளவர் என்ற ஐயப்பாடும் இருந்த நிலையில், தன் மனைவியிடமே ஒழுக்கமாக இருக்க தெரியாத ஒரு நபர் என்று தெரிய வரும்போது நிச்சயமாக இந்த இவர் பொது வாழ்விற்கு லாயக்கில்லாத நபர் என்பது ஏறத்தாழ முடிவே ஆகிறது.
எவன் செத்தாலும், கெட்டாலும், ஓடிப் போனாலும் தி.மு.க.தான்...ன்னு சொல்றீங்க?
தி.மு.க., தரும் 25 தொகுதி ஏற்புடையதல்ல: காங்., கிரீஷ் ஷோடங்கர் மீண்டும் அதிரடி
மார் 02, 2026 05:11 am