டில்லியில் அமித்ஷா உடன் இபிஎஸ் சந்திப்பு
சென்னை : டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில், இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டு பேச்சு துவங்கப்படவில்லை. எனினும், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே தலைவர்கள் மட்டத்தில் மறைமுக தொகுதி பங்கீடு பேச்சு நடந்து கொண்டு தான் உள்ளது. நேற்று மதுரையில் பியூஷ் கோயல் தலைமையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இபிஎஸ், தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் ,இன்று காலை டில்லி சென்றார். பிரதமர் மோடி தமிழகம் வந்து திரும்பிய மறுநாளே, இபிஎஸ் டில்லி சென்றிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று இரவு பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்