/ இந்தமுறை ஓட்டு யாருக்கு / இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல!

இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல!

சாருமதி, 20கல்லுாரி மாணவி, தாம்பரம், சென்னை'நா ன் முதல்வன்' உள்ளிட்ட, தி.மு.க., அரசின் திறன் மேம்பாட்டு திட்டங்கள் வழியே இளைஞர்கள் பயனடைந்து, உள்ளூர் முதல் சர்வதேச நாடுகள் வரை வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். எங்கள் தாம்பரம் தொகுதியில், தி.மு.க., அரசு நிறைய மாற்றங்களை செய்துள்ளது. தனிப்பட்ட முறையில், தி.மு.க.,வின் திட்டங்களால் நான் பயனடைந்து உள்ளேன். எனவே, தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., அரசு தொடர வேண்டும். அரசியல் குறித்து நடிகர் விஜய் நன்கு அறிய வேண்டும். ஒரு முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் போது, அவருக்கு ஓட்டு போடுவது குறித்து சிந்திக்கலாம். இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல. இளம் தலைவர்கள் பட்டியலில், உதயநிதி, நடிகர் விஜயை காட்டிலும், அனைவருக்கும் விருப்பமான தலைவராக அண்ணாமலை தான் உள்ளார். வரும் சட்டசபை தேர்தல், தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளை தீர்மானிக்கும் என்பதால், முதல் முறை வாக்காளர்கள் உட்பட, அனைவரும் சிந்தித்து பொறுப்புடன் ஓட்டு போட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vijai hindu
மார் 30, 2026 22:02

இதுல அண்ணாமலை அனைவருக்கும் பிடித்த விருப்பமான தலைவர் அது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் விஜய் உதயாநிதி வேஸ்ட்


Uuu
மார் 30, 2026 10:33

DMK அரசு எனக்கு இப்படி உதவி பண்ணியதால் இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று சொல்ல தோணிய உனக்கு எதை வைத்து அவர்கள் இலவசம் தருகிறார்கள் என்று தோணவில்லை என்பது தான் நீ படித்த கல்வியின் லட்சணம் வாழ்க


மேலும் இந்தமுறை ஓட்டு யாருக்கு