கருணாசுக்கு கடும் எதிர்ப்பு; நாறடிக்கும் போஸ்டர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் திருப்புத்துார், மானாமதுரை - தனி ஆகிய இரு தொகுதிகளில் தி.மு.க., நேரடியாக களம் காண்கிறது. சிவகங்கை தொகுதி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, அ.தி.மு.க., சார்பில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து நிற்க, பணபலம் படைத்த காங்., மாநில பொதுச்செயலர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.க., தலைமை கருணாஸ் தொகுதியை கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காமெடி பீசு கருணாஸ் முக்குலத்தோர் கிடையாது. கருணாஸோட அம்மா முக்குலத்தோர் வீட்ல வேலைக்கு இருந்தவுங்க. மற்றபடி தேவர் சமுதாயத்திற்கும் கருணாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
தமிழ் நாட்டில் இந்த மாதிரி உள்ள ஜாதி கட்சிகள் ஒழிக்க வேண்டும் , தேர்தல் வந்தால் போதும் இவர்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை . இவர் எல்லாம் ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர் என்று ஏற்று கொள்ள முடியவில்லை . எல்லாம் தமிழக மக்களின் தலையெழுத்து .
சிவகங்கை தொகுதி இப்போதே திமுகவிலிருந்து கலந்துவிட்டது. அத்தொகுதியில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்து என்கிற மதமே இல்லை என்று இந்த கிருத்துவ கருணாஸ் சொன்னதை இன்னும் கோபத்தில் உள்ளனர். இதுதான் சமயம் என்று காத்துக்கொண்டுள்ளனர். மேலும் திண்ணைகளிலும் டீக்கடை. கோவில்கள் என்றும் தொகுதி முழுக்க பெண்களும் ஆண்களும் நமட்டு சிரிப்போடு கூவத்தூர் விஷயத்தை சொல்லி சொல்லி கேவலமாக சிரிக்கிறார்கள். அதனால் இந்த முறை கருணாஸ் படுமோசமாக தோற்பது உறுதி என்கிறார்கள்
தேர்தல் நடக்கும் முன்பே கருணாஸ் முடிவு தெரிந்து விட்டது.
கூவத்தூரில் கூத்தடித்து கும்மாளமடித்த கருணாஸ்
கருணாஸ் ஒரு நல்ல நடிகர், அவரது நடிப்பை ரசிக்கலாம். அவரை அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சார் கூவத்தூர் அங்கிள் - உலக புகழ்
நாடு போற்றும் அய்யா முத்துராமலிங்க ஐயாவை உதாரண புருஷராக அவர் வழியில் மக்கள் செல்ல வேண்டும் . . . கழுசடைகளை மக்கள் வெறுத்து , வெளியேற்ற வேண்டும் . . .
இவருக்கு ஓட்டு போடுவதிற்கு நோட்டாவுக்கு போடலாம்.
இவருக்கு வேறு ஒரு பெயரும் உண்டு.சொல்லத்தான் முடியவில்லை
மேலும் செய்திகள்
அமைச்சரின் அறிவிப்புகளே ரத்து: வீட்டுவசதி வாரியத்தின் பரிதாபம்
மார் 29, 2026 12:51 am