/ செய்திகள் / ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்

ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'என்னைப்பற்றி தவெக கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்,' என்று நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக மிரட்டியதால்...

சென்னையில் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார்'' என கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரஜினி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.இவ்வாறு ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.https://x.com/rajinikanth/status/2033787480840015977?s=20

மன்னிப்பு

தன் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்த நிலையில், ரஜினியிடம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துக்கொள்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 110 )

Arul Narayanan
மார் 19, 2026 05:51

காலம் 30 ஆண்டுகளாக பதில் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது ரஜினிகாந்த் என்று பொய் பெயர் கொண்ட இவர் ஒரு கோழை என்று. அர்ஜுனன் விராட தேசத்தில் ஒரு வருடம் மட்டும் தான் பிருன்னளை வேஷம் தரித்தான். இந்த நபரோ 30 வருடங்களாக அதைத் தான் அணிந்து கொண்டு இருக்கிறார். ஆதவ் என்ற நபர் சொன்னது யூகம் தான் என்பது கூட புரியாமல் ஆளாளுக்கு இவருக்கு சாமரம் வீசிக் கொண்டு இருக்கிறார்கள். இவருக்கு மட்டுமல்ல இவரை இந்த விஷயத்தில் ஆதரிப்பவர்கள் எவருக்கும் முதுகெலும்பு இல்லை.


Rajsri
மார் 18, 2026 18:25

பிரச்சாரத்துக்கு போக முடியாது வயது ஆகிவிட்டது அதனால் கட்சி ஆரம்பிக்கவில்லை சரி.... அப்போ சினிமா நடிக்கலாமா ஜெயிலர்1 ஜெயிலர் 2, எல்லாம் சண்டை காட்சிகள் அதுவும் ஸ்டைல் மன்னன் அப்போ உடம்பு என்னாச்சு ரெஸ்ட் எடுக்க வில்லையா ? என்ன ட்ராமா எல்லா படமும் ஒருத்தர் production la . தமிழ்நாடு மக்கள் முட்டாள்களா? ரஜினி ரசிகர்களே இன்னுமும் இவரை நம்புகிரீர்களா? வயதான காலத்தில் சினிமா நடித்து விட்டு வீட்டில் உட்காருங்கள். எந்த அறிக்கையும் வேண்டாம். எந்த காலமும் பதில் சொல்ல வேண்டாம்.


GoK
மார் 18, 2026 18:00

இந்த நடிகனை ஏன் சீரியசாக எடுத்து முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைகள் பக்கங்களை வீண் செயகின்றன தமிழ் மக்களுக்கு தம்பிடிக்காசுக்கு கூட உதவாதவர். நல்லவேளை இவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஒண்ணுக்கு இரண்டாக ஆயிருக்கும் கோமாளிகள் எண்ணிக்கை.


Bhaskaran
மார் 18, 2026 13:34

இப்படி அறிக்கை விட்டால் ரெட் ஜெயண்ட் சார்பில் அடுத்த படத்துக்கு காண்ட்ராக்ட் தயார்னு அர்த்தம் போலிருக்கு .விஜய்கிட்டே இருக்கும் தன்னம்பிக்கை கூட இவரிடம் இல்லை ஜகா வாங்கினார் என்பதே உண்மை


SUBBU,MADURAI
மார் 18, 2026 04:33

ரஜினி படமான காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்கிற படம் நேற்று நம்ம தினமலரில் ரிலீஸ் பண்ணி வெற்றிகரமாக 100 நாளை sorry 100 Comment ஐ கடந்து ஓடி விட்டது. எனவே தயவுசெய்து இன்னைக்கும் இந்த ரஜினி படத்தை ஓட்ட வேண்டும் என நினைக்காதீர்கள் தூக்கி விடுங்கள். Bore அடிக்கிறது Pls.


Kasimani Baskaran
மார் 18, 2026 04:05

ரஜினியை மிரட்டவேண்டியது இல்லை - நேரடியாக அதிக வருமானம் வரும் நல்ல, லாபமான படம் கொடுத்தால் விசுவாசமாக இருப்பார். தமிழன் / திராவிடன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க மாட்டார். வாழ் நாள் நடிகர்கள் திராவிட / தமிழ் மாயையில் சிக்குவது கிடையாது.


Chand
மார் 18, 2026 01:45

Who was standing outside on the road to meet former CM Jayalalithaa to say sorry for a title of a movie? Who went and met former CM Edapadi at his office for release of a film.


surya krishna
மார் 17, 2026 23:39

ஆதவ் அர்ஜுனா சொன்னது முற்றிலும் உண்மை இவர் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்தது என்ன என்று விளக்க வேண்டும் ரஜினி அரசியலில் கோழை சினிமாவில் மட்டும்தான் ஹீரோ. சினிமாவில் இத்தனை காலம் சம்பாதித்து வைத்த பணமும் செலவழிந்து போகும் என்று அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வந்தால் தான் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் தன் மருமகனின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் மகளின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் அதற்கு மேல் இவர் ஒரு தொடை நடுங்கி ஆள் என்று எல்லாருக்கும் தெரியும்


கள்ள லாட்டரியும் லயோலாவின் முட்டும்
மார் 18, 2026 04:43

லயோலா ஜோசஃப் தான் சம்பாதித்த காசை கட்சிக்கு செலவழிக்கிறார் என யாராவது நம்பினால் ஆழ்ந்த அனுதாபங்கள். கூட்டத்தை அதிகப் படுத்திக் காட்ட நாற்பத்து இரண்டு பேரை பலியிட்ட சுயநலத்திற்கு முன் சுய லாபத்திற்காக ரசிகர்கள் வாழ்க்கையை கெடுக்காத ரஜினியின் பண்பு மலை போல் உயர்ந்து நிற்கிறது. இன்று கோடிகளில் பணம் இருந்தால் தான் தாவெகவில் சீட்டு என்பதை பார்த்தால் விஷயம் புரியும். அரசியல் கட்சி ஆரம்பிக்க ஓரிரு வருடங்களுக்கு முன் பெயரளவில் மாணவர்களுக்கு நிதி வழங்கியதை நாற்பது வருடங்களாக சத்தமின்றி உதவி வருபவரோடு ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனம். மதத்தை மறைத்த பெயரில் அறிமுகம், செட்டலாகும் வரை தந்தையின் இயக்கத்தில் சீன் படம், தான் வளரும் வரை ரசிகனாய் காண்பித்து பின் எட்டி உதைக்கும் தரமில்லா செயல், பணம் கொடுத்து தன்னை முதன்மைப் படுத்திக்கொண்ட செயல் என எல்லாவற்றிலும் எதிர்மறை பிண்ணனி கொண்டவரையும் ஒரு கூட்டம் தலைவராக பின் தொடர்வது துரதிஷ்டமானது. அன்று ரஜினி கட்சி தொடங்க முற்பட்ட போது தமிழருவி மணியன் போன்ற தூய்மையான மனிதர்கள் உடன் இருந்தனர். இன்று விஜயுடன் இருக்கும் ஃபைனான்சியர் ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் பிண்ணனியை ஆராய்ந்தால் கட்சியின் தரம் விளங்கும்.


கள்ள லாட்டரியும் லயோலா முட்டும்
மார் 17, 2026 22:18

காலம் பேசாது, பொறுமையாக பதில் சொல்லும். சித்தர்களைப் போல் என்ன ஒரு தீர்க்கமான பார்வை? தேர்தலுக்குப் பின் தாவெக கலைப்பு, பச்சோந்தி மீண்டும் ஓர் புதிய நிறம் கொண்டு வேறு ஓர் கட்சிக்கு மாறி மாறி இதே லயோலா ஜோசஃபை கோழை என தூற்றுவது என என்னென்மோ கண்ணுக்கு தெரிகின்றன.


sankaranarayanan
மார் 17, 2026 20:22

பாவம் ஆதாவுக்கு ஆதரவாக ஒருவர்கூட அந்த கட்சியில் பேச இதுவரை முன் வரவிக்கல்லை விஜய்கூட இதுவரை அறிக்கை ஒன்றும் வெளியிட வில்லை ஆதவ் சற்று பொறுமையாக நாவடக்கத்தோடு இருக்க வேண்டும் ரஜினி எந்த அரசியலையும் செய்யாதவர் அவரைப்போய் வம்பில் இழுக்க இவர் ஓர் அரைவேக்காடு


Minimole P C
மார் 18, 2026 04:33

But Rajini used to give buildup that he wants to something to TN people by entering politics just before release of his every movie to market it. Is it not?