/ செய்திகள் / ராகுல்- பிரியங்கா சண்டை பின்னணி

ராகுல்- பிரியங்கா சண்டை பின்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்துடன் அசாம் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு, முதல் வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அசாமில், 10 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் முதல்வர் சர்மா.பா.ஜ.,வின் முக்கிய எதிரி காங்கிரஸ். இந்த கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களை, பா.ஜ., பக்கம் அழைத்து வருகிறார் முதல்வர் சர்மா. இது, காங்கிரசில் குறிப்பாக பிரியங்காவிற்கு பின்னடவை ஏற் படுத்தியுள் ளது. அசாமின் காங்., வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை கவனித்து வருகிறார் பிரியங்கா. எப்படியாவது காங்கிரசை ஆட்சியில் அமர வைக்கும் குறிக்கோளுடன் இறங்கி உள்ளார். ஆனால், இவருக்கு இடி மேல் இடியாக இரண்டு சம்பவங்கள் இறங்கி உள்ளன.அசாம் காங்., - எம்.பி., பிரதியுத் பொர்தோலி, கட்சியிலிருந்தும் எம்.பி., பதவியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டார். இவர் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளதோடு, திஸ்பூர் சட்டசபை தொகுதியிலிருந்து பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறாராம். இவரது மகன் பிரதீக் மார்கரெட்டா, அத்தொகுதியின் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தந்தை பா.ஜ.,வில் சேர்ந்ததை அடுத்து, இவர், 'நான் போட்டியிடப் போவதில்லை' என அறிவித்து விட்டார்.இன்னொரு பக்கம், அசாம் காங்., முன்னாள் துணை த லைவர் திவ்யஜோதி தாலுக்தாரும் பா.ஜ.,வில் இணைந்து விட்டார். தன் தலைமையில் உள்ள மாநிலத்தில் இப்படி நடக்கிறதே என்ற ஆதங்கம் பிரியங்காவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகுலோ, இது குறித்து கவலைப்படவில்லை. 'யார் யார் காங்கிரசிலிருந்து போகின்றனரோ போகட்டும்; மக்கள் நம் பக்கம் தான்' என்கிறாராம் அவர்.'எப்போதுமே தேர்தல் நேரத்தில் காங்., தலைவர்களை பணம் கொடுத்து, தன் பக்கம் கொண்டு வருவார் அமித் ஷா. அது தான் அவரது வழக்கம். இப்படி தான் பா.ஜ.,வினர் அனைத் து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கின்றனர்' என குற்றம் சாட்டுகின்றனர் காங்., தலைவர்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால், தற்போது முதல்வராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மாவும் காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
மார் 22, 2026 14:40

கடைசியில் உன்னாலே நான் கெட்டேன். என்னால நீ கெட்ட .


Rajasekar Jayaraman
மார் 22, 2026 11:54

காந்தி தெரியாமல் சொன்ன உண்மையை கட்சியை கலைப்பது பற்றி இருவரும் போட்டி போடுகிறார்கள் போல இருக்கிறது யார் களைப்பது என்று.


Rathna
மார் 22, 2026 11:23

கட்சி ஆளும் ஆட்சியை எதிர்ப்பதை விட்டு, இந்திய நாடு எதிர்ப்பு மற்றும் பங்களாதேஷி, பாகிஸ்தானிய ஜிஹாதி ஆதரவு என்ற நிலையை எடுத்ததோ அதன் இறங்குமுகம் ஆரம்பித்து விட்டது.


SUBBU,MADURAI
மார் 22, 2026 09:51

இந்தியாவில் அமெரிக்க CIA ஏஜென்டுகள் பிடிபடுகிறார்கள். ஆனால், எந்தவொரு அமெரிக்கரும் அதைக் கொண்டாடுவதை நீங்கள் காண முடியாது. மாறாக, எந்த நாட்டிலாவது நமது RAW முகவர்கள் பிடிபட்டால் காங்கிரஸ் கட்சியின் ராஜமாதா சோனியா மற்றும் வயதாகியும் இன்னும் பப்புவாகவே இருக்கும் ராகுல்காந்தி உட்பட ஒட்டுமொத்த காங்கிரஸ் கூட்டமும் அதை கொண்டாடி மகிழ்கிறது. இதிலிருந்தே இவர்களின் தேசப்பற்று எப்படிப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.


V Venkatachalam, Chennai-87
மார் 22, 2026 09:39

நல்ல ஜனநாயகத்துக்கு நல்ல எதிர் கட்சி கண்டிப்பாக இருக்கோணும். கான்+கிராஸ் நியாய தர்மங்களை இழந்து விட்டது. அதுனால கான்+கிராஸ் எதிர் கட்சியாக இருக்க எந்த தகுதியும் இல்லை. இந்த லஷணத்தில் நம்ம முகஸ் ராகுல் கானை அடுத்த பிரமத மந்திரின்னு சொல்லி ஏத்தி உட்டாரு. எப்போ ஸ்ம்ரிதி கிட்ட ராகுல் கான் தோத்தூட்டானோ அப்பவே கடையை மூடி இருக்கோணும். இப்போ மாத்திரம் என்னவாம்? மூட்டை முடிச்சை கட்டாவிட்டால் ராகுல் கான் சொல்ற மக்களே அந்த வேலயை பண்ணி அனுப்பிருவாங்க.


சசிக்குமார் திருப்பூர்
மார் 22, 2026 09:24

இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி பிடிக்க காரணமே அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட 80சதவீத எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவினர்


VENKATASUBRAMANIAN
மார் 22, 2026 09:01

காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது


Raj
மார் 22, 2026 08:04

பேசாமல் காங்கிரஸ் கட்சியை ஒரு நல்ல பைனான்ஸ் நிறுவனத்திடம் அடகு வைத்து விட்டு இங்கிலாந்து சென்று விடுங்கள். கட்சியின் நிலவரம் : சோனியா - வீட்டில் சுனக்கம் ராகுல் - ரோட்டில் நடத்தம் பிரியங்கா - வீதியில் சிறுபிள்ளை விளையாட்டு கார்க்கே - வயதுமூப்பின் தூக்கம் மாநில கட்சி தலைவர்கள் - மாற்று கட்சி தேடல் மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி மூடல்.


Ganesun Iyer
மார் 22, 2026 07:17

இரும்புக்கை தளபதி இருக்கும் வரையில் எங்களுக்கு கவலையில்லை.. தளபதியின் தயவோடு பார்லியில் அரியணை ஏறுவோம்..


Lakshminarasimhan
மார் 22, 2026 08:11

எந்த தளபதியை சொல்லுறீங்க நம்ம பொம்மை தளபதியா ?


Keshavan.J
மார் 22, 2026 10:59

முதலில் பெயரை தவறு இல்லாமல் எழுதூங்க . வேஷம் மாறினாலும் மண்டையில் உள்ள குல்லாவை மறந்துட்டீங்களா.


Kasimani Baskaran
மார் 22, 2026 07:02

குடும்பக்[க]காட்சி