100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி
மதுராந்தகம்:மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மதுராந்தகம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் உறுதிமொழி எடுத்தல் மற்றும் கையெழுத்து இயக்கம், பழைய நகராட்சி அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது. இதில், சட்டசபை தொகுதிக்கான தேர்தல் மேற்பார்வையாளர் ராஜ பாபு, நகராட்சி கமிஷனர் சுகேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், தாசில்தார் பாலாஜி துவக்கி வைத்தனர். 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில், நகராட்சி துாய்மை பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், 100 சதவீதம் வாக்களிக்கவும், வாக்கு உங்கள் கையில், வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்போம், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். -------------------------------
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
எட்டு தேர்தல்களாக களம் கண்ட மாஜி மகனுக்கு வழிவிட்டு கட்சி பணியில் கவனம்
மார் 29, 2026 03:57 am
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
மார் 29, 2026 04:20 am
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
மார் 29, 2026 11:49 am