கட்சி விளம்பரங்கள் அழிப்பு
ஊத்துக்கோட்டை:சட்டசபை தேர்தலை ஒட்டி, அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சுவர்களில் கட்சி விளம்பரம் மற்றும் போஸ்டர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ம் தேதி நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. அதன்படி, அரசுக்கு சொந்தமான சுவர்களில் வரையப்பட்டுள்ள கட்சி விளம்பரங்கள், கட்சி சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டு உள்ள மேம்பால சுவர்களில் போஸ்டர்கள், கட்சி சின்னங்கள் ஆகியற்றை பேரூராட்சி ஊழியர்கள் அழித்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும்; டில்லியில் இபிஎஸ் பேட்டி
மார் 20, 2026 07:16 am
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுங்கள்: விஜய்க்கு த.வெ.க., நிர்வாகிகள் நெருக்கடி
மார் 20, 2026 05:01 am