Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும்; டில்லியில் இபிஎஸ் பேட்டி

4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும்; டில்லியில் இபிஎஸ் பேட்டி

நமது டில்லி நிருபர்

4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசினேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார். இது குறித்து நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு சூழல் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எல்லாம் சேர்ந்துவிட்டன.

அதிமுகவில் சேரும் கட்சிகள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இனிமேல் தேர்தல் நோக்கி பயணிப்போம். தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்து அமித்ஷாவுடன் கலந்து பேச டில்லிக்கு அன்புமணி, தினகரன் வருகிறார்கள்.

4 நாட்களில்

தொகுதி பங்கீடு குறித்து பேச மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை (மார்ச்.21) சென்னை வருகிறார். 4 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசினேன். திமுக தலையிலான கூட்டணி மாதிரி எங்கள் கூட்டணி கிடையாது.

அமைதியாக, அழகாக கூட்டணி பேச்சு முடிவு பெற்று தொகுதிகள் வெளியிடப்படும். எந்த சிக்கலும் இல்லை. எங்களுக்குள் விட்டு கொடுத்து, யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அந்த தொகுதிகளை அவர்கள் பெறுவது தான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. பல தேர்தல்களை சந்தித்துள்ளது.

வெற்றி வாய்ப்பு

எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் வரவில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது.

பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஒரு வாரத்தில் எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதிமுக ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய் கொண்டு இருக்கிறது. 3 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். தேர்தல் பிரசாரம் கூட்டம் பிரமாண்டமாக நடந்துள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement

மார் 20, 2026 03:42 pm

சவாரிக்குதிரைக்கு புது லகான் போட்டு அனுப்பி இருப்பார் ஷா

Reply Rate this
மார் 20, 2026 02:37 pm

உங்களுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது நாங்க கொடுக்குறதுதான் சீட்டு வேணும்னா கூட்டணில இருங்க இல்லன்னா naanga தனியாவே போட்டியிடுகிறோம்னு சொல்ல தெம்பும் திராணியும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும்

Reply Rate this
மார் 20, 2026 02:15 pm

ஆமா சாயம் வெளுத்து விடும் :

Reply Rate this
மார் 20, 2026 12:29 pm

பாவம் பிணை கைதி லெவல் இவர் லெவல் தேவையா அவர்களை கழட்டி விட்டு வாருங்கள் எடபடியாரே

Reply Rate this

40 நாட்களில்.எல்லாம் தெரிந்து விடும்.

Reply Rate this
மார் 20, 2026 10:39 am

பிஜேபி தலைமை இப்பொழுது திரு அண்ணாமலையின் கணிப்பை புரிந்திருக்கும். அண்ணாமலை சொன்னது தனித்து தேர்தல், இல்லை என்றால் 60 சீட்டு குறைந்தது கேட்டு பெறவேண்டும். ஈ.பி.ஸ் - 25 க்கு மேல் தரமாட்டார் .

Reply Rate this
duruvasar - indraprastham
ஜோசியம் சொல்வதை நிறுத்திவிட்டு கூட்டணி வெற்றிக்கு ஏதாவது உருப்படியாக பேசுங்கள்.
மார் 20, 2026 10:59 am
Rate this
மார் 20, 2026 10:38 am

ep.பி எஸ் மு க யார் வேண்டுமானாலும் ஆட்சி? காமராஜர் காலம் பொன் போன்றது. மற்ற எல்லோரும் ஆண்டு நாசமானது தான் மிச்சம். இறைவனை நம்பி மேலும் வாழ்வோம்.

Reply Rate this
மார் 20, 2026 10:38 am

மே 4 மதியம் எல்லாம் தெரிந்து விடும் கூட்டணி போட முடியாததால் திராவிட மாடல் 2 அரியணை ஏறும் 2031 இல் TVK , ADMK , TMC , பிஜேபி கூட்டணி அமைக்கலாம்

Reply Rate this
duruvasar - indraprastham
ஐயா ஜோசியகார்ரே திமுக கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும்., ஸ்டாலின் டெபாசிட் வாங்குவாரா , திமுக கூட்டணியிலிருந்து ஏதாவது பிசிக்குமா, என்பதை பற்றி கட்டம் என்ன சொல்கிறது. விரைந்து விரிவான பதிலை பதிவிடுங்கள்.
மார் 20, 2026 11:04 am
Rate this
மார் 20, 2026 10:01 am

மே 4 திமுக அமைச்சர்கள் பாஸ்போர்ட் எல்லாம் பறிமுதல் பன்னனும்

Reply Rate this
மார் 20, 2026 09:37 am

திமுக கூட்டணி முடிவுகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுக்கப்படுகிறது ஆனால் அதிமுக முடிவுகள் எல்லாம் டெல்லியில் எடுப்பதை பார்த்தால் ஸ்டாலின் சொல்வது சரி தான் போல. இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லி அணிக்குமான போட்டி.

Reply Rate this
How kanimozhi met Rahul gandhi in New Delhi for alliance talks
மார் 20, 2026 10:16 am
Rate this