/ செய்திகள் /  யுகாதி வாழ்த்தில் கூட பிரிவினை ஏற்படுத்துவதா?

 யுகாதி வாழ்த்தில் கூட பிரிவினை ஏற்படுத்துவதா?

திராவிட நாடு என்று சொல்லி, தமிழின் தொன்மையை தி.மு.க.,வினர் மறைக்கின்றனர்; இது, அரசியலுக்கான அப்பட்டமான நாடகம். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும், 'யுகாதி' வாழ்த்து தெரிவிப்பதில் கூட பிரிவினையை ஏற்படுத்தி, ஹிந்தியை குறிப் பிடுகின்றனர். இது தமிழர் பண்பாடு கிடையாது. இருவரும், தமிழின் அடையாளத்தையே திராவிடம் என்று மறைத்து கொண்டிருக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் கட்சிகளை ஏற்றினால், கூட்டணி என்ற மேடை சரிந்து விடும். டில்லி சென்றாலே குழப்பம் என, நினைக்கின்றனர். உண்மையில், அடிமை கூட்டணி என்றால், 'இண்டி' கூட்டணி தான். அவர்கள் தான், மற்றவர்களை அடக்குகின்றனர். நாங்கள் மதவாத கட்சி கிடையாது. எல்லா மத பண்டிகைகளுக்கும் பா.ஜ., சார்பில் வாழ்த்து சொல்கிறோம். எனவே, த.வெ.க., தலைவர் விஜய், மதவாத கட்சி என சொல்வது, தி.மு.க.,வைத்தான். - தமிழிசை,முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்