/ செய்திகள் /  விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

 விஜய் வந்தால் தோளில் துாக்கி கொண்டாடுவோம்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவான திட்ட அறிக்கையை கொடுக்காமல், தி.மு.க., அரசு கபட நாடகம் ஆடுகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.தேர்தல் கூட்டணி என்பது கடைசி நிமிடத்தில் கூட மாறும். எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவோம். அவர் மட்டுமல்ல; யார் வந்தாலும் ஏற்போம். தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, 'வெட்டு குத்து' நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் வெளிப்படையாக தொகுதி பங்கீடு நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவும் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார். - செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அரவழகன்
மார் 12, 2026 10:17

பெண்கள் வாக்கு அ.தி.மு.க.வுக்கு தேவை இல்லையோ..


Chinnappan Arulappan
மார் 12, 2026 09:36

சவாரிக்குதிரைகள் எல்லோருக்கும் சவாரி தானா?? பாவம் பரிதாபம்


VENKATASUBRAMANIAN
மார் 12, 2026 08:18

எடப்பாடி இவர்களை அடக்க வேண்டும். மாறுவதை கண்டிக்க வேண்டும்.