தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்
சேலம்: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - தி.மு.க.,வில் இணைந்த நிலையில், தி.மு.க.,வில் இருந்த பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., நேற்று அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இளையகண்ணு, 58; மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக இருந்தார். இவர் அக்கட்சியில் இருந்து விலகி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தி.மு.க.,வில் நேற்று இணைந்தார். இதுகுறித்து இளையகண்ணு கூறுகையில், ''அ.தி.மு.க.,வில் தீவிரமாக கட்சி பணியாற்றியவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. பா.ஜ., கைப்பாவையாக செயல்படும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது பலரும் அதிருப்தியில் உள்ளனர்,'' என்றார். இதற்கிடையே, சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, 65; கடந்த 2019ல் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்திருந்தார். இவர், தி.மு.க.,வில் இருந்து விலகி, தன் ஆதரவாளர்களுடன் சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தார். தமிழரசு கூறுகையில், ''ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில், 2019ல் இணைந்தேன். எனக்கும், ஆதரவாளர்களுக்கும் உரிய மரியாதை தராததால், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்,'' என்றார். முன்னதாக ஓமலுாரில் தமிழரசு அளித்த பேட்டியில், ''பன்னீர்செல்வம் போன்றோருக்கு தி.மு.க.,வில் என் நிலையை விட மோசமான நிலை ஏற்படும். மாற்று கட்சியில் இருந்து சேர்ந்த என்னை போன்ற ஏழை, எளியோருக்கு ஸ்டாலினிடத்தில் இடம் கிடையாது,'' என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையா? மறுக்கிறார் நயினார் நாகேந்திரன்
மார் 09, 2026 10:25 pm
திமுக திட்டங்களை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சிகள்: ஸ்டாலின் கிண்டல்
மார் 09, 2026 08:04 pm