மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஈ.வெ.ராமசாமி பட சர்ச்சை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்ட நுழைவாயில் ஒன்றில், ஈ.வெ.ரா., படம் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது. இதனால், அந்தப் படம் உடனடியாக அகற்றப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலையொட்டி, தே.ஜ., கூட்டணி சார்பில் மதுரை மண்டேலா நகரில், இன்று மாலை பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணிகளில், கடந்த ஒரு வாரமாக பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். பொதுக் கூட்டத்தில் கட்சியினர் எளிதாக வந்து செல்ல வசதியாக, நான்கு பிரமாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், முதல் நுழைவாயிலில் ஈ.வெ.ரா.,வில் துவங்கி அடுத்தடுத்து மூன்று நுழைவாயிலில் மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டன. மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் படங்களும், நுழைவாயிலையொட்டி உள்ள சுற்றுப்பகுதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழக அரசியல் தலைவர்களின் படங்களுடன், ஹிந்து மத கோட்பாடுகள், நம்பிக்கை, சம்பிரதாயங்களுக்கு எதிராக கருத்து பரப்பிய திராவிட கழக நிறுவனர் ஈ.வெ.ரா.,வின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையாக வெடித்தது. இது குறித்த செய்திகள் பொதுவெளியில் வெளியானத்தை தொடர்ந்து, ஈ.வெ.ரா.,வின் படம் அகற்றப்பட்டது. இது குறித்து பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டபோது, 'திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர் என்பதால், ஈ.வெ.ரா., படமும் வைக்கப்பட்டது. பொதுவெளியில் விமர்சனம் கிளம்பியதால், படம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் பா.ஜ.,வின் சின்னமான தாமரை படம் வைக்கப்பட்டு விட்டது' என்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த வெகு மட்டமான சர்ச்சையை உருவாக்கியவர் ஆர்.எஸ்பாரதி திராவிட மாடல் அரசின் அமைப்பு செயலாளர் என்றுதான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் இப்படி தேர்தல் வருமுன் பல பல சில்லுண்டி விஷமங்கள நிறையாக வரும் மக்களின் மனதை திசை திருப்பவே செய்யும் நயவஞ்சக வேலை
மனமார்ந்த பாராட்டுக்கள் தினமலர் இவரைப் "பெரியார்" என்று சொல்லாமல் "ஈ வெ ராமசாமி" என்று சொன்னதற்கு
ஈர வெங்காய ராமசாய நாயக்கன் உரித்துப் பார்த்தால் ஒரு பிண்ணாக்கும் உள்ளே இருக்காது ஏதோ தனது ஆந்திரத்திலும் கன்னடத்திலும் யாருக்குத் தெரியும்? ஒழுக்கமான ஆண் பெண் உறவுமுறையை அறவே வெறுத்தவன் எந்த இனமோ எந்தக் குலமோ சமுதாயத்தில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அறவே அழித்து ஒழித்து விட்டு அதன்பின் தமிழகத்தில் கடை பரப்பித் தமிழகத்தை உய்விக்க வந்த மகான் போல ஒரு அகங்காரம் அவன் "தமிழர்கள் காட்டு மிராண்டிகள்" என்று அப்பட்டமாகச் சொன்னது ஒன்றும் தவறில்லை ஏனென்றால் இவரப் போன்ற ஒரு பிறவியைத் தலைவன் என்றும் பெரியார் என்றும் ஏற்றுக் கொண்டு ஒரு கும்பல்- கொள்ளைக் கும்பல்- துதிபாடியதில்லையா? அதிலேயே அவன் கண்டு கொண்டான் இது முட்டாள்களின் கூட்டம் என்பதை
அட உடுங்க பாஸ்,
பிஜேபி அராசின் விழாவில் இந்த திராவிட அரசுக்கு தெரியாதா தெரியாமலா நடந்திருக்கு. அந்த நாக்குக்கும் பிஜேபி க்கும் என்ன உறவு, இல்லை நாட்டுர்கஜாக உயித்துறைப்தவனா அவன்.
ஈவெரா படம் வைக்க ஏற்பாடு செய்தே பெரும் தவறு. நமக்கு சுதந்திரம் வேண்டாம் என்று சுதந்திரத்திற்கு முன்பும் கூறினார். ஆங்கிலேயரே சுதந்திரம் கொடுத்தபின்பும் சுதந்திரதினந்தன்று கருப்புக்கொடி ஏந்திய தேசவிரோதி அப்போது அண்ணாதுரை மற்றும் கருணாநிதியும் ஈவெரா தலைமையில் திராவிட கட்சியில் இருந்தவர்கள். சுதந்திரம் எல்லா உரிமைகளின் அடித்தளம். சுதந்திரம் கிடைத்தால்தான் அடுத்து மனித உரிமைகைளைப்பற்றியே எண்ண முடியும். நமக்கு சுதந்திரம் வேண்டாம் ஏன்ற தேசவிரோதிகள்.
ஹிந்து விரோதி பெரியாரின் படத்தை அங்கு வைத்து தமிழையும் தமிழரையும் அவமானப்படுத்தி விட்டார் அதிமுக பழனிச்சாமி.
பெரியார் எதிர்த்து அரசியல் செய்தவன் எவனும், தமிழக அரசியலில் வெற்றி பெற்றது இல்லை.
தேவை இல்லாத படம்..அகற்றியது நன்றே
எவனோ போலி திராவிடன் பழைய உறவில் உள்குத்து வேலை செய்கிறான் போல. இதை களையெடுக்கவிட்டால் பிஜேபியும் திராவிட கடலில் உப்பை போல கரைந்து போகும்.
மேலும் செய்திகள்
த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் பிசுபிசுத்தது; கட்சியினர் அதிர்ச்சி
மார் 02, 2026 05:29 am
தி.மு.க., தரும் 25 தொகுதி ஏற்புடையதல்ல: காங்., கிரீஷ் ஷோடங்கர் மீண்டும் அதிரடி
மார் 02, 2026 05:11 am
தொகுதி பங்கீடு குழு அமைப்பதில் மெத்தனம்; பழனிசாமி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி
மார் 02, 2026 05:19 am
தனி சின்னத்தில் போட்டியிட்டால் 3 சீட் தான்; தி.மு.க., நிபந்தனையால் வைகோ அப்செட்
மார் 02, 2026 05:24 am