Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்; 'சிட்டிங்' அமைச்சர்களுக்கு 'செக்'

 ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்;  'சிட்டிங்' அமைச்சர்களுக்கு 'செக்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க., அமைச்சர்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக, இந்த தேர்தலில் அவர்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


தி.மு.க., கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ள நிலையில், தே.மு.தி.க.,வையும் எங்கள் கூட்டணியில் சேர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
சமீபத்திய கள நிலவரம் குறித்த அறிக்கை, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு கிடைத்துள்ளது. அதில், பல அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வரின் குடும்பத்தில் நடந்த ஆலோசனையில், 'பல அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தி.மு.க., சார்பில் பலமில்லாத வேட்பாளர்களை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது' என பேசப்பட்டுள்ளது.
எனவே, ஜெயலலிதா பாணியை பின்பற்ற, ஸ்டாலின் தரப்பு முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்த விஸ்வநாதனை, கடந்த 2016 தேர்தலில், தற்போதைய தி.மு.க., அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக ஆத்துார் தொகுதியில் ஜெயலலிதா களம் இறக்கினார். அங்கு, விஸ்வநாதன் தோல்வி அடைந்தார்; எனினும், பெரியசாமிக்கு கடும் சவாலாக இருந்தார்.
தற்போதைய 'சிட்டிங்' அமைச்சர்கள் பண பலத்துடன் வசதியாக உள்ளனர். இதேபோல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும் பண பலத்துடன் உள்ளனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிட்டிங் அமைச்சர்களை, அவர்கள் வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்குவதற்கு பதிலாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

தேர்தல் களத்தில் கடும் போட்டியை எதிர்கொண்டு, வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்காலம் உண்டு என்பதால், அமைச்சர்கள் கடுமையாக பணியாற்றி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் தரப்பு கருதுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement

மார் 01, 2026 10:41 pm

முதல்வர் அமைச்சர்களுக்கு "செக்" வைக்கவில்லை முதலவர் அமைச்சர்களுக்கு "செக்" எழுதி கொடுத்துள்ளார் கொடுத்துக்கொண்டம் இருக்கிறார் அதான் கஜானா காலியாக உள்ளத்து

Reply Rate this
மார் 01, 2026 08:24 pm

ஜெயாவின் ஆளுமைத்திரன் இந்ததிராவிட குடும்பத்திற்கு வராது,

Reply Rate this
மார் 01, 2026 06:34 pm

ஜெயலலிதா பாணி என்று தலைப்பு போட்டு ஜெயலலிதாவை கேவலப்படுத்தவேண்டாம் .

Reply Rate this
மார் 01, 2026 03:30 pm

ஸ்டாலின் எடப்பாடி தொகுதியில் நிற்கப்போகிறாரா ?

Reply Rate this
மார் 01, 2026 12:44 pm

ஈரானில் கமேனி கொல்லப்பட்டான். மன்னராட்சி ஒழிந்தது. கூடிய சீக்கிரம் மக்களாட்சி ஜனநாயகம் மலரும். அதேபோன்று தமிழகத்தில் அந்த "வாரிசு" ஆட்சி ஒழியவேண்டும். தாமரை மலரவேண்டும். மக்கள் நிம்மதியாக வாழவேண்டும்.

Reply Rate this
மார் 01, 2026 10:27 am

விசிக தொண்டனெல்லாம் தவெகக்கு போய்ட்டாங்கனு 4 சீட் மட்டுமே ஒதுக்குவரா

Reply Rate this
அம்மா அவர்களின் ஆளுமை யாருக்கும் இல்லை அவரை இந்த துண்டு சீட்டு டன் ஒப்பீடு செய்யவே கூடாது...தயவு செய்து வேண்டாம்
மார் 02, 2026 07:52 am
Rate this
மார் 01, 2026 05:48 am

ஸ்டாலின், சீமான், எடப்பாடி, விஜய் ஒரே தொகுதியில் போட்டியிட வேண்டும்.
செய்வீர்களா?

Reply Rate this
arumai
மார் 01, 2026 11:26 am
Rate this
மார் 01, 2026 05:16 am

இவரையும் அந்த இரும்பு லேடியையும் நகைச்சுவைக்காக கூட ஒப்பீட்டு செய்தி போடாதாதீர்கள். துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது . ஸ்டாலினால். ஆங்கிலத்திலும் அருமையாக உரையாற்றுவார் ஜெயலலிதி குப்பனையும், சுப்பனையும் அமைச்சர் ஆக்கி பார்த்தவர் ஜெயலலிதா குடும்பத்துக்கு கும்பிடு போடும் பழைய விசுவாசிகளுக்கே அமைச்சர் பதவி. அமைச்சர் சரியில்லை எனில் அரை நொடியில் தூக்கி எறிந்து அடுத்தவரை அமைச்சராக்க முடியும் ஜெயலலிதாவால் . அமைச்சர்களால் தூக்கம் போகிறது என்று புலம்பத்தான் முடியும் ஸ்டாலினால். தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் அம்மாவால் . என்ன செய்வது என்று கூட தெரியாது ஸ்டாலினால். ஆகையால் ஒரு காமெடி பீஸை அம்மாவுடன் கனவில் கூட ஒப்பிடு செய்யாதீர்கள்

Reply Rate this