தி.மு.க., ஆட்சி அறிவிப்புகளால் 10 பைசா கூட பயனில்லை
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதுபோல், தி.மு.க., ஆட்சியில் ஆடம்பரமாகவும் பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. 'அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இரு மாதங்களாகியும், அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜன., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருந்தால், கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, அத்திட்டத்தின்படி பலன்களும், அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எதுவுமே வழங்கவில்லை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை தடுக்க, தி.மு.க., அரசால் நடத்தப்பட்ட ஏமாற்று நாடகம்தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அறிவிப்பு. தி.மு.க., அரசு நினைத்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த முடியும். ஆனால், அதற்கு துப்பில்லாத தி.மு.க., அரசு, '2030ல் வானத்தை வில்லாய் வளைப்போம்' என அளக்கிறது. வெறுங்கைகளால் முழம் போடும் முதல்வரின் அறிவிப்புகளை மக்கள் நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
மார் 09, 2026 03:11 pm
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am