/ செய்திகள் /  தி.மு.க., - எம்.பி., காரில் ரூ.50 லட்சம் பறிமுதல்

 தி.மு.க., - எம்.பி., காரில் ரூ.50 லட்சம் பறிமுதல்

சென்னை: தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில், ஆவணமின்றி எடுத்து சென்ற 50 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டசபை தேர்தலையொட்டி, பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை, சென்னை புரசைவாக்கம், தானா தெருவில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை, பறக்கும்படை குழுவினர் மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி, 50 லட்சம் ரூபாய் எடுத்து செல்வது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட கார், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் அலுவலகத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், எழும்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

duruvasar
மார் 28, 2026 15:38

எங்க அது அவருடைய டிரைவர் பேடா காசுங்க. அவரு காசு வேற இதேமா கல்லறை, பிணவறை இப்படித்தாங்க. பாவம் ஏழை டிரைவர் வயிற்றில் அடிக்காதீங்க.


Barakat Ali
மார் 28, 2026 12:53

2012-ல் தொடங்கப்பட்ட அதிபர் ஷி ஜின்பிங்கின் நீண்டகால ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சீனா ஊழல் அதிகாரிகளை, குறிப்பாக பெரும் இலஞ்சம் அல்லது கையாடல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, மரண தண்டனைக்கு உட்படுத்துகிறது. நூற்றுக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டாலும், மரண தண்டனை பொதுவாக மிகப்பெரிய தொகைகள் சம்பந்தப்பட்ட தீவிரமான வழக்குகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மரண தண்டனையாகவோ, சில சமயங்களில் இரண்டு வருட கால அவகாசத்துடனோ அல்லது உடனடி மரண தண்டனையாகவோ முடிவடைகிறது. முக்கியப் பதவிகளில் இருந்தவர்களின் மரண தண்டனைகள்: லை சியாவோமின் போன்ற மூத்த அதிகாரிகளும் வங்கியாளர்களும் நூற்றுக்கணக்கான மில்லியன் இலஞ்சம் வாங்கியதற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை: பல அதிகாரிகளுக்கு இரண்டு வருட கால அவகாசத்துடன் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் குற்றங்கள் எதுவும் செய்யப்படாவிட்டால், இந்தத் தண்டனை பெரும்பாலும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. பெரும் விசாரணைகள்: 2012 முதல், அதிகாரத்தை வலுப்படுத்தவும் பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் இராணுவம் மற்றும் அரசுப் பணியில் உள்ள உயர் பதவியில் இருக்கும் "புலிகள்" உட்பட ஆயிரக்கணக்கான அதிகாரிகளைத் தண்டித்துள்ளன. கடுமையான தண்டனைகள்: மரண தண்டனையைத் தவிர, ஊழல் அதிகாரிகள் சொத்துக்கள் முழுமையாகப் பறிமுதல் செய்யப்படுதல், ஆயுள் தண்டனை மற்றும் அரசியல் உரிமைகள் ரத்து செய்யப்படுதல் போன்ற தண்டனைகளையும் எதிர்கொள்கின்றனர்.


ram
மார் 28, 2026 12:45

அது அவரின் பாக்கெட் MONEY


Rathna
மார் 28, 2026 12:44

நாங்கள் டீ குடிக்க வைத்து இருந்த பணம், அதிகாரிகளால் பிடுங்கப்பட்டதாக கோர்ட் பெட்டிஷன் போட வாய்ப்பு உள்ளது.


வாய்மையே வெல்லும்
மார் 28, 2026 12:11

அதானி அம்பானி என வாய்க்கு வாய் விஷமம் கூவும் திராவிட குரல்கள் .. ஜெகத்துக்கே ரக்ஷகனாய் விளங்கும் அவிங்க கட்சி தில்லாலங்கடி ஆளை பற்றி பேசவே மாட்டார்கள். இந்த ஆளு அதானி அம்பாநிக்கே உப்பு தண்ணி காட்டி குடிக்கவைக்கிற அளவுக்கு சொத்து வெளிநாட்டில் ஒளித்துவைத்து உள்ள பரம ஆய் யோகியன். இவனை பிடித்து பிரச்சனை கொடுத்தாலே அறிவாலயம் ஆட்டம் காணும்.


Modisha
மார் 28, 2026 12:09

இந்த பக்கம் 50 லட்சம் கொண்ட கார் , வேறு பக்கம் 50 கோடி கொண்ட கார் . திமுக பிறவி திருடர்கள் .


xyzabc
மார் 28, 2026 11:52

50 லட்சம் என்பது ஒரு வேர்க்கடலை மாதிரி. இந்த ஜகத்தில் பாதுகாப்பு இல்ல. தமிழக மக்கள் வூழல் வாதிகளுக்கு வோட்டு போடுவதை நிறுத்தனும்.


Barakat Ali
மார் 28, 2026 11:11

உரிமைத்தொகை என ஏமாற்றியது ஒரு கரம். பெண்கள் பாதுகாப்பை பறிப்பது மறு கரம். எங்கே போனது ஸ்டாலினின் இரும்பு கரம்.?


NACHI
மார் 28, 2026 10:32

கக்கூஸ் பினாயில் பணம் ..போங்க சார் அங்குட்டு


Vasan
மார் 28, 2026 10:26

500 கோடி என்றால் அது ஒரு செய்தி. வெறும் 50 லட்சம் ரூபாய் பிடிபட்டது என்று சொல்லி அவரை கேவலப்படுத்தி விட்டீர்கள்.