உதயகுமார் மீது பணப்பட்டுவாடா புகார்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் டி.குன்னத்துாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கட்டிய 'அம்மா' கோவில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கட்சியினர் தினமும் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்துவதோடு உணவும் வழங்குவதாக கூறி, திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதியிடம் தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவனேசன், ஐ.டி., அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் புகார் அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் பொதுமக்கள், கட்சியினருக்கு பணப்பட்டுவாடா தினந்தோறும் நடக்கிறது. தேர்தல் முடியும் வரை, அந்த இடத்திற்கு 'சீல்'வைக்க வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
எட்டு தேர்தல்களாக களம் கண்ட மாஜி மகனுக்கு வழிவிட்டு கட்சி பணியில் கவனம்
மார் 29, 2026 03:57 am
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
மார் 29, 2026 04:20 am
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
மார் 29, 2026 11:49 am