Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 உதயகுமார் மீது பணப்பட்டுவாடா புகார்

 உதயகுமார் மீது பணப்பட்டுவாடா புகார்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் டி.குன்னத்துாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கட்டிய 'அம்மா' கோவில் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கட்சியினர் தினமும் பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்துவதோடு உணவும் வழங்குவதாக கூறி, திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதியிடம் தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவனேசன், ஐ.டி., அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் புகார் அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், 'நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் பொதுமக்கள், கட்சியினருக்கு பணப்பட்டுவாடா தினந்தோறும் நடக்கிறது. தேர்தல் முடியும் வரை, அந்த இடத்திற்கு 'சீல்'வைக்க வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.

Advertisement