/ செய்திகள் / வேட்பாளர் தேர்வில் கிறிஸ்டோபர் பார்முலா: ராகுல் திட்டத்தால் தமிழக காங்கிரசார் அதிர்ச்சி

வேட்பாளர் தேர்வில் கிறிஸ்டோபர் பார்முலா: ராகுல் திட்டத்தால் தமிழக காங்கிரசார் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளதால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்கப்பட்டது. இப்பதவிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் முயற்சித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். இவர், காங்கிரசில் அகில இந்திய செயலராக இருந்தாலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளால் பெரிதும் கண்டுகொள்ளப்படாதவர். ஆனாலும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க நினைத்த ராகுல், கிறிஸ்டோபரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு 28 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக உள்ள 17 பேர் மட்டுமின்றி, பலரும் தொகுதிகளைப் பெற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் கிறிஸ்டோபரை தேர்வு செய்தது போல, 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, ராகுல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக, டில்லி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில், வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறை தொகுதிக்கு முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர், தரவு மற்றும் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்ற தலைவர்கள் பலர் முயன்றபோது, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த சுதாவை நிறுத்தினார். அதுபோலதான், 28 சட்டசபைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் விரும்புகிறார். எனவே, காங்கிரஸ் வேட்பாளர்கள், எளிய சமூக, பொருளாதார பின்னணி கொண்டவர்களாக, களப்பணியில் திறன் கொண்டவர்களாக இருப்பர். இதனால், மயிலாடுதுறை ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்புபோல, வரும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

வில்லிபுத்தூரான்
மார் 11, 2026 23:36

ஹிந்துக்கள் ஓட்டு மட்டும் இவர்களுக்குப் போட்டு விட்டு ,விரல் சூப்பிக் கொண்டு இருக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
மார் 11, 2026 19:08

காங்.. வேட்பாளர்கள் தேர்வு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தால் காங்.. வேட்பாளர்கள் தேர்தல் முடிவும் நிச்சயமாக அதிர்ச்சியாகவேயிருக்கும்.


Ramalingam shanmugam
மார் 11, 2026 14:58

.... அதனால் தான்


சந்திரன்
மார் 11, 2026 13:50

செல்வப் பெருந்தகையுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க கூட்டணிதான் வேணும்னு ஒத்தக்காலில் நின்னீங்கல்ல. இது தேவைதான் உங்களுக்கு.


Minimole P C
மார் 11, 2026 13:19

Ragul to understand the formula of DMK and candidates. DMK has some vital formulas which never will change. 1. Party head and Govt. head are one and the same. 2. Appoint district level leaders and make them as duke of that area and allow them to earn them by any means and never change them. Always help them to retain their posts. Democracy, social justice, women empowerment, SC/ST uplift, etc just talk for press purposes. Always talk something like Tamil, Tamil and Hindi imposition. Ragul can use Gandhi for this purpose and who is going to understand that which Gandhi. Loot maximum that will help even to bribe people, HC/SC and even EC.


Madras Madra
மார் 11, 2026 11:34

ராகுலுக்கு அவ்வளவு திறமை எல்லாம் கிடையாது பின்னால் யாரோ இருக்கிறார்கள்


தமிழ்வேள்
மார் 11, 2026 11:17

இண்டி கும்பலின் வேட்பாளர்கள், அறிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை முடிவு செய்வது சர்ச் & ஜமாஅத் கும்பல் மட்டுமே... கட்சி தலைவன்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என்பது உலகறிந்த உண்மை..


Haja Kuthubdeen
மார் 11, 2026 10:33

செல்வ பெருந்தகை உட்பட சிட்டிங் எம் எல் ஏ ஒருத்தனுக்கும் மீண்டும் போட்டியிட அனுமதிக்கவே கூடாது...


மாயவரம் சேகர்
மார் 11, 2026 10:07

கிறிஸ்டோபர் திலக் சரியா? கிறிஸ்டோபர் மாணிக்கம் சரியா? எது சரியான பெயர்? ஸ்டாலினின் திமுகவின் ஆதரவாளர்களாக உள்ளவர்களை தேர்வு செய்யாமல், புதிய முகங்களை, தேர்வு செய்யும் ராகுலின் முயற்சி , பாராட்டத்தக்கதே. செல்வப் பெருந்தகைக்கு சீட் கிடைக்குமா?பசி ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்குமா?கோஷ்டி பூசல்கள் தாண்டி , ராகுல் , வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால், அது பெரிய விஷயமே .


Anand
மார் 11, 2026 10:41

செல்வப்பெருந்தகைக்கு கண்டிப்பாக சீட் கிடைக்கும், காரணம் அவன் ஒரு கிரிப்டோ.


Modisha
மார் 11, 2026 10:53

வேறு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் . ராகுலுக்கு அதுதான் முக்கியம்.


vbs manian
மார் 11, 2026 08:56

பேரவையில் அமளி செய்யும் திறமை உள்ளவர்களை தேர்வு செய்யவும். பின்னாளில் பார்லிமென்டில் கை கொடுக்கும்.