/ செய்திகள் /  மத்திய அமைச்சர்கள் பிரசாரம்: ஓட்டுகளாக்க பா.ஜ., திட்டம்

 மத்திய அமைச்சர்கள் பிரசாரம்: ஓட்டுகளாக்க பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர உள்ளனர். மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுதும் அனுப்பி, மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமரின் வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், கழிப்பறை திட்டம், சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக, 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தி.மு.க., தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்து வருகிறது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி இன்று மதுரையில் நடக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், வரும் 7ம் தேதி வேலுாருக்கும், 11ல் திருச்சிக்கும் வருகிறார். அவரை தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர். மூன்று மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம், தமிழகம் முழுதும் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து, தங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பர்; பயனாளிகளையும் சந்திப்பர். இதனால், மக்கள் மத்தியில் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் நல்ல பெயர் ஏற்பட்டு, அது ஓட்டுகளாக மாறும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arul Narayanan
மார் 01, 2026 12:53

அவர்கள் வந்து புரியாத பாஷையில் புரியாத புள்ளிவிவரங்கள் சொன்னால் சாதாரண மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? அவர்கள் மேற்பார்வையில் இங்கே தண்டத்திற்கு வயிறு வளர்க்கும் தலைவர்களையும் தொண்டர்களையும் வேலை வாங்க வேண்டும். மேடை ஏறக் கூடாது.


Oviya Vijay
மார் 01, 2026 10:33

நான் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னோடு பணிபுரிந்த தமிழ் நண்பர்களை ஒரு வார இறுதி நாளில் தியேட்டருக்குச் சென்று 2 ஸ்டேட்ஸ் என்னும் ஹிந்தி திரைப்படம் காண்பதற்காக அழைத்தேன். ஆனால் அவர்கள் வர மறுத்தனர். எப்படியோ வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். திரைப்படம் அவர்களுக்குப் புரியவேயில்லையென்றும் இனிமேல் ஹிந்தி திரைப்படங்களைக் காண தங்களை அழைக்காதே என என்னிடம் கடிந்து கொண்டனர். இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் தமிழ் வசனங்களும் அதிகம் உண்டு. அவ்வாறிருந்தும் அவர்கள் ஹிந்தி திரைப்படங்களைக் காண பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு ஹிந்தி மொழியெல்லாம் செட் ஆகாது என்ற எண்ணத்திலிருந்து வெளிவர முடியவில்லை. அதே போல் தான் நீங்கள் என்னதான் மத்திய அமைச்சர்களை இங்கே இறக்குமதி செய்து அழைத்துக் கொண்டு வந்து பேச வைத்தாலும் பெரும்பாலான நம் தமிழ் மக்கள் பேந்தப் பேந்த முழிப்பார்களேயன்றி, கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்பது தான் உண்மை...


Chinnappan Arulappan
மார் 01, 2026 09:52

எத்தனை நடிகர்கள் வந்து நடித்தாலும் தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது.. எப்போதும்


பாமரன்
மார் 01, 2026 08:15

வாங்க வாங்க... அப்பிடியே ஒங்க டூர் ப்ரோக்ராம்க்கும் கராபுரான்னு ஹிந்தில ஒரு பேர் வச்சிட்டு வந்தா தமிழ் நாட்டு மக்கள் இன்னும் சிறப்பாக பரிசு குடுப்பாங்க....


vivek
மார் 01, 2026 07:12

மக்கள் போடமாட்டாங்க, தேர்தல் ஆணையம் வோட்டு போட்டுடும்.