ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த சிங்.எஸ்.செல்வராஜ் என்பவர், அ.தி.மு.க., நகர செயலராகவும், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர்.
இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெய ல லிதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவங்களை பட்டு ஜரிகையால் பொறித்து தயாரிக்கப்பட்ட புடவை மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் உருவம் பொறித்த புடவை ஆகியவற்றை, பன்னீர்செல்வத்திடம் கடந்த 2020ல் கொடுத்து உள்ளார்.
இதற்கான தொகை 3 லட்சம் ரூபாயை, செல்வராஜுக்கு, பன்னீர்செல்வம் வழங்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், 'முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., என்னிடம் வாங்கிய பட்டுப்புடவைக்கான தொகையை, இன்னாள் முதல்வர் மீட்டு தருவாரா?' என கேட்டு, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, திருபுவனம் பகுதி முழுதும் போஸ்டர்கள் ஒட்டினார் செல்வராஜ்.
செல்வராஜ் கூறியதாவது:
திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டுப்புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறது.
இதற்காக அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து, வாழ்த்து பெற்றபோது, நினைவுப்பரிசாக பட்டுப்புடவையை வழங்கினோம்.
இதையடுத்து, பிரதமர் மோடி கோவைக்கு வந்தபோது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்குவதற்காக, பிரதமர் மோடி உருவம் பொறித்த பட்டுப்புடவையை பன்னீர்செல்வம் கேட்டார்.
அதற்கான பணத்தை தருவதாகவும் கூறியதை அடுத்து, அவர் விரும்பியபடியே புடவையை தயார் செய்து, கோவை கொண்டு சென்றேன். பன்னீர்செல்வம் அதை வாங்கிச் சென்றாரே தவிர, அதற்கான பணத்தை பல முறை கேட்டும் தரவில்லை.
தற்போது அவர், தி.மு.க.,வுக்கு சென்று விட்ட நிலையில், எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, முதல்வர் ஸ்டாலின் தான் பெற்று தர வேண்டும். அதை வலியுறுத்தியே, போஸ்டர் அச்சடித்து ஒட்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
Political is not a company, politician is not a employer. Complainant Selvaraj not made business with ops . Only Selvaraj made complimentry to ops.
வசூல் செய்த பணத்தை அண்ணா அமுக்கிவிட்டார் என்று கவிஞர் பாரதிதாசன் தனது குயில் பத்திரிகையில் புலம்பியது நினைவிருக்கிறதா ????
அதே போல ஒருத்தர் 15 L கொடுக்க முடியும் என்று சொனார் அதை வாங்கி கொடுங்கள்
வாங்கிய புடவைக்கு பணம் கொடுக்க வக்கில்லையா மூன்று முறை முதல்வரா இருந்தவருக்கு..
திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம். தீயசக்திக்கு கொடுக்கும் பட்டு சால்வை எல்லாம் அப்படியே வீட்டுக்கு போய் அங்கிருந்து நல்லி சில்க்ஸ் போய்விடும். அதற்கான பணமும் கராராக வாங்கிவிடுவாளாம்.
ஏற்கனவே தேள் காங்கிரஸ் கொட்டிய திருடன் போல் யிருக்கிறார். அவர் கிட்ட போய்.... ... வாங்கி கொடுக்க வேணுமுன்னா உறுதிமொழி தருவார். அதேதான் சீனி சக்கரை... ப்பா

இத்தனை நாள் எங்கடா இருந்த தம்பி இதுவரைக்கும் கேட்க உன்னால முடியலையா....