/ செய்திகள் / திமுக பாணியில் கவனிப்பு; மேலிடத்திடம் பாஜ வலியுறுத்தல்

திமுக பாணியில் கவனிப்பு; மேலிடத்திடம் பாஜ வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போர்க்களத்தில் எதிரியை வீழ்த்த, அவர்கள் எடுக்கும் ஆயுதத்தையே நாமும் எடுக்க வேண்டும்; அதேபோல் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில் 'கவனிப்பு' வேலைகளை செய்தால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்படும்' என, மேலிடத் தலைவர்களிடம் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா என, எந்த தேர்தலாக இருந்தாலும், தி.மு.க.,வில் 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், வார்டு செயலர், பகுதி செயலர் மற்றும் நிர்வாகிகளுக்கு தனித்தனியே 'கவனிப்பு' நடக்கிறது. அவர்களும் தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். தங்கள் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களை, ஒரு ஓட்டு, ஒரு குடும்பம் என்ற வீதத்தின் அடிப்படையில், ஓட்டுப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், 'கவனிப்பு' செய்கின்றனர்.வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' செய்யும் போது, பறக்கும் படையினரிடம் புகார் கொடுத்தால், அவர்கள் வந்ததும் கவனிப்பு முடங்குகிறது. அந்த சமயத்தில், கவனிப்பு கிடைக்காத வாக்காளர்கள், அதை தடுத்த கட்சியினரிடம், 'எங்களுக்கு தருவதை, நீங்கள் ஏன் நிறுத்த வேண்டும்? அவர்கள் கொடுப்பது போல் நீங்களும் கொடுங்கள். 'கவனிப்பு செய்தாலும், ஓட்டு யாருக்கு போட வேண்டும் என்பதை, நாங்கள் தான் முடிவு செய்வோம்' என கேட்டு பிரச்னை செய்கின்றனர். எனவே, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில், 'கவனிப்பு' என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போது, தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதோடு, ஆட்சியிலும் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, போர்க்களத்தில் எதிரி எடுக்கும் ஆயுதத் தையே, நாமும் எடுக்க வேண்டும்; அப்போ து தான் வெற்றி கிடை க்கும். அதே போல் வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில் 'கவனிப்பு' வேலைகளை செய்ய, பா.ஜ., தயங்கக் கூடாது.அதற்கு, மேலிடம் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என, மே லிடத் தலைவர்களிடம் தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு மாதம் குடும்பத்தை மறந்து, தேர்தல் பணியில் ஈடுபடும் முழு நேர பா.ஜ., தொண்டர்களின் குடும்ப செலவை, மேலிடம் ஏற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Venugopal S
பிப் 08, 2026 14:59

அப்போது அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?


ஆரூர் ரங்
பிப் 08, 2026 12:44

தேர்தல் பிரச்சாரப் பணியிலுள்ள ஏழை, நடுத்தர ஊழியர்களுக்கு அந்த நாட்களில் வருமானம் இருக்காது. அப்படிப்பட்டவரகளுக்கு கட்சி உதவினால் மட்டுமே பிரச்சாரம் தடையின்றி நடக்கும். உதாரணமாக முழு நேர கம்யூனிஸ்டு ஊழியர்களுக்கு கட்சியே உதவுகிறது. குற்றமில்லை. ஆனால் யாரேனும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது ஊழல் கட்சி என்ற இமேஜைதான் கொடுக்கும்.


நாகா
பிப் 08, 2026 12:41

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த கவனிப்பு பழக்கம் ரத்தத்தில் ஊறியதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை. உழைத்து சம்பாதித்தால் பணத்தின் அருமை தெரியும். வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம் பாவ பணமாக இருக்குமே ஒழிய வியர்வை சிந்தி சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பே இல்லை. அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


சத்யநாராயணன்
பிப் 08, 2026 11:50

பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசியல்வாதிகள் யாரும் மக்கள் சேவை செய்யவே முடியாது அவர்கள் அனைவரும் இயல்பாகவே கொள்ளை அடிக்க தான் விரும்புவார்கள் இந்தச் செயல் தவிர்க்க முடியாததும் கூட எனவே ஓட்டுக்கு துட்டு என்ற கலாச்சாரத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றால் அந்த பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும் பரவாயில்லை


Rajarajan
பிப் 08, 2026 11:37

உன் குத்தமா, என் குத்தமா, யாரை நானும் குத்தம் சொல்ல ? எல்லா புகழும் வாக்காளருக்கே.


இளந்திரையன் வேலந்தாவளம்
பிப் 08, 2026 11:23

இதை bjp மேலிடம் அனுமதிக்க கூடாது. நாட்டுப்பற்று மிக்கவர்கள் தான் bjp கு வாக்கு செலுத்த போகிறார்கள். 189ல் bjp யின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் தற்போதைய எண்ணிக்கை யை பாருங்கள். கிராமத்தில் ஒரு சொல்வடை உண்டு... மெல்ல தின்றால் பனையயும் திங்கலாம்.


சாமானியன்
பிப் 08, 2026 09:32

திமுகவை அழிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தற்காலிகமாக கொஞ்சமா அதர்மம் செய்யலாமாம். கிருஷ்ணரே அப்படித்தானே சொல்லியிருக்காரு. கோடையில் பணமழை.


Oviya Vijay
பிப் 08, 2026 08:14

நான் சொல்லல...


அப்பாவி
பிப் 08, 2026 07:45

எல்லோருக்கும் ஓட்டுக்கு 2000 நிச்சயம். தமிழா... அதிருஷ்டக் காரண்டா நீ...


vaiko
பிப் 08, 2026 07:43

தேச பக்தர்கள் என்று சொல்வதுவெல்லாம் வெறும் வாயினால் சுடும் வடைதானா?


SULLAN
பிப் 10, 2026 10:03

தேச பதர்கள் ...அவர்கள்.