விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு
சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய, த.வெ.க.,வுக்கு அழைப்பு விடுத்த, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 'தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதுதான், தனது லட்சியம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறி வருகிறார். இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார். 'த.வெ.க., உடன் நாங்கள் பேச்சு நடத்தவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், பிரசாத் கருத்து அதற்கு எதிர்மறையாக இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத், அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும், சட்டசபை தேர்தல் பணிக் குழுவில், அவருக்கு அளிக்கப்பட்ட, ஊடகத்துறை பொறுப்பிலிருந்தும், உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என, நேற்று இரவு நயினார் நாகேந்திரன் அறிவித்தார். இதற்கிடையில், இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசைக்கு என்ன தண்டனை எனக் கேட்டு, பிரசாத் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதோ கொடி அசைகிறது என கூவிய எட்டப்பன் பழனிச்சாமி, பனையூர் பண்ணையார் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூவிய ஹிந்தியிசை மற்றும் நேற்று புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்த கேஎஸ்ஆர்க்கு என்ன தண்டனை ஐயா நாலு கோடி நாகேந்தின் எசமான்?
இது நாள் வரை அவரை கூட்டணிக்கு அழைத்த நயினார் மற்றும் அவரைப் போலவே ஏங்கி செயல்பட்டு இந்த நடவடிக்கைக்கும் பின்னால் உள்ள பழனிச்சாமி?
நோயை விட கொடுமையானது ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மார் 10, 2026 02:12 am
தேர்தல் எதிரொலியால் போட்டா போட்டி; தி.மு.க., - அ.தி.மு.க., பரிசு பொருட்கள் வழங்கல்
மார் 10, 2026 06:04 am