ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய்
தமிழகத்தில், ஜாதியால் பிறந்து, சிந்தித்து, வாழ்ந்து, மடியும் சமூக கட்டமைப்பு உள்ளது. இதில் வசமாக சிக்கி கிடக்கிறோம். ஜாதியை மறுத்து, பாட்டாளி வர்க்கமாக வாழ முயன்றாலும் அனைவரும் ஒருங்கிணைய முடியவில்லை. தமிழகத்தில் ஜாதிய ஆணவக் கொலைகள் தொடர்கின்றன. ஈவு இரக்கமின்றி கொடூரமாக வெட்டி சாய்க்கும் மனநோய் ஆட்டிப்படைக்கிறது. ஜாதி பெயரை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அப்படித்தான் சமூக அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. புரட்சிகரமாக பேசி எழுதினாலும், குடும்பத்தில் கூட மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலையை வலதுசாரிகள் கண்டிப்பதில்லை. ஜாதியத்தை தகர்க்கும் அறிவாயுதம், பேராயுதம் அரசியலமைப்பு சட்டம் தான். இன்றைய இளைஞர்களிடம், மாறுபட்ட முற்போக்கு சிந்தனையை வளர்க்க வேண்டும். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருமா அவர்களே நீங்கள் சரியான ஆராய்ச்சி செய்ய வேண்டும். சீமானிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய MP பதவி, வசதி, மரியாதை இவற்றை எதிர்பார்த்து காலத்தை கடத்தாமல் நாளைய தலைமுறை ஒழுக்கத்துடன், சுயமரியாதையுடன், போதையை தவிர்த்து சுய சிந்தனை செய்பவனாக, இலவசத்திற்க்கு கையேந்தாமல், உழைத்து வாழும் மக்களை உருவாக்க சிந்தனை செய்யுங்கள். திமுக மற்றும் அதிமுக கட்சிகளை நம்ப வேண்டாம். ஸ்டாலின் தருவது மாதம் ஆயிரம் மகளிருக்கு இலவசம். ஏழை தொழிலாளியின் டாஸ்மாக் செலவு மாதம் பத்து முதல் பதினைந்து ஆயிரம். யாருக்கு லாபம் - சாராய ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு. ஏழை எப்படி முன்னேற முடியும். இலவசத்தை எதிர்பார்த்து பிச்சை எடுத்து வாழ வேண்டியது எழுதப்பட்ட விதி அல்ல திராவிட மாடலின் சதி. சாதி பார்த்துதான் வேட்பாளரை தேர்வு செய்கிறார்கள். பணம் கொடுத்து வாக்கு வாங்குகிறார்கள். பிறகு இவர்கள் எப்படி நாட்டை, மக்களை முன்னேற்ற பாடுபடுவர்கள். லஞ்சம் ஊழல் செய்து சொத்து சேர்க்காத ஒரு அரசியல்வாதி இந்தியாவில் உண்டா? நீங்கள் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து உள்ளீர்கள். மதவாதம், சாதி பேதம் இவற்றை தவிர்த்து உங்கள் சிந்தனையை விரிவு படுத்த வேண்டும். உங்கள் கட்சியில் அல்லது பொதுவில் படித்த அனுபவம் உள்ள நேர்மையான நாட்டை, மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒன்று அல்லது பல குழுக்களை அமைத்து செயல் திட்டத்தை தயார் செய்து விவாதித்து செயல் படுத்துங்கள். மாற்றம் முன்னேற்றம் தானாக வரும். மக்கள் கையேந்த தேவை இல்லை. சுயமரியாதை தானாக வளரும். முதலில் தலைவர்களுக்கு தெளிவு வேண்டும். தலைவனே அரசியல் வியாபாரி மக்களை சுரண்டி வாழ்கின்றான். மது விலக்கு மாநாடு விசிக நடத்தி என்ன பயன். மீண்டும் திமுக கூட்டணியில் தொடர்கிறீர்கள் மதுவை ஒழித்தால் மட்டுமே கூட்டணி என்று உங்களால் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் நிபந்தனை வைப்பதில்லை. எல்லாம் துட்டு, மணி மணி, பதவி, பந்தா, வாரிசு அரசியல், சொத்து சேர்க்க வேண்டும். பத்திரிகை செய்தி: நியுசிலாந்து நாட்டின் முன்னால் பிரதமர் ஐந்து ஆண்டு பதவியை முடித்துவிட்டு கட்சியை விட்டு நாட்டை விட்டு வெளிநாட்டில் தகுதிக்கு ஏற்ற வேலை தேடி குடும்பத்துடன் குடியேறி விட்டார். ஆனால் நீங்கள் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் வாழையடி வாழையாக வாரிசு அரசியல் செய்து சொத்து சேர்க்க வேண்டும். காமராஜர், கக்கன் போல யாராவது தன்னலம் இல்லாத தலைவர் தமிழ்நாட்டில் உண்டா? மக்களை மடையர்களாகவே வைத்து ஏமாற்ற வேண்டும் அதுதான் அரசியல் வியாபாரிகளின் வேலை. கல்வி கற்று என்ன பயன். சிந்திக்காத மிருக புத்தி உள்ள, சுயநலம் கொண்ட அறிவாளிகள் வாழ்ந்து என்ன பயன். எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல் இதுதான் இன்றைய தமிழ்நாடு. ஆட்சி மாறலாம் ஆனால் காட்சி மாறாது. மக்களே சிந்தியுங்கள். மீண்டும் தேவை ஒரு சுயநலமற்ற காமராஜர் ஆட்சி. எந்த அரசியல் கட்சி அதற்கு தயார்? அந்த இலவசம் இந்த இலவசம் தருவேன் என கூறும் திமுக அல்லது அதிமுக யாராவது லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் என்று பிரகடனம் செய்தது உண்டா அல்லது இனி செய்ய தயாரா? எந்த அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்காமல் அவர்களது பணிகளை செய்கிறார்கள்? இது தெரியாமல் எந்த அரசியல்வாதியாவது நாட்டில் உண்டா? எப்படி நாடும், மக்களும் முன்னேற முடியும். தடைக்கல்லே அரசியல்வாதியும் அரசு நிர்வாகமும்தானே.
ஓசி பிரியாணிக்கு கூவுற உனக்கே முறைச்சு பாத்தா ரெண்டு தட்டுங்கர. அப்போ உழச்சு தின்கிறவன் சும்மா இருப்பானா
யாரப்பா வலதுசாரி? எந்த வலதுசாரி ஆணவக்கொலையை ஆதரித்தார்? வேங்கை வயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்றம் சாட்டிய நிலைப்பாட்டுக்கு சப்பைக்கட்டு கட்டிய நீங்க இடது சாரியா?
நாடக காதல், மற்ற ஜாதி திருமணம் ஆகாத இளம் பெண்கள், திருமணம் ஆகி குடியும் குடித்தனமுமாக இருக்கும் குடும்ப பெண்கள், குறி வைத்து சீரழிக்கப்படுவது, குடும்பங்களை பெண்களின் பலவீனங்களை பயன்படுத்தி, அழிப்பது, ஜாதி சட்டங்களின் பின்னால் ஒழிந்து கொண்டு மற்ற குடும்பங்களை, சமூகத்தையே அழிப்பது, இதையே கொள்கையை கொண்டு இயங்கும் மாபியா கட்சி, தீயமுகாவின் அடியாட்கள்... இதுவே உண்மையான அடையாளம் . . .
மேலும் செய்திகள்
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
மார் 09, 2026 03:11 pm
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am