/ செய்திகள் /  திருமாவுக்கு எதிராக டம்மி வேட்பாளர்?

 திருமாவுக்கு எதிராக டம்மி வேட்பாளர்?

தி ருமாவளவனுக்கு எதிராக, பொருளாதார ரீதியாக வலுவான வேட்பாளரை பா.ம.க., நிறுத்தாததால், அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வி.சி.க., தலைவர் திருமாவளவன், கடந்த 1999ல் போட்டியிட்ட முதல் தேர்தல் துவங்கி, 2014 வரை, அவரை எதிர்த்து, பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்தியது. இது, இரு சமுதாய மோதலாக மாறும் சூழல் உருவானதால், 2014 முதல் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதை, பா.ம.க., தவிர்த்தது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு காட்டுமன்னார் கோவில் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், லோக்சபா எம்.பி.,யாக உள்ள திருமாவளவன், திடீரென காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதனால், 12 ஆண்டுகளுக்குப் பின், தேர்தல் களத்தில் பா.ம.க.,வுக்கும் திருமாவளவனுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், பா.ம.க., வேட்பாளர், பல் மருத்துவரான அன்பு சோழன், தேர்தல் களத்திற்கு புதியவர். தேர்தல் செலவுகளுக்கு கட்சியை நம்பியிருப்பவர். இதனால், அவரால் திருமாவளவனை எதிர்கொள்ள முடியுமா என்ற சந்தேகம், அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !