ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த 'மாஜி' முதல்வர்களின் திட்டம் கைகூடுமா?

லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர, காங்கிரசைச் சேர்ந்த இரு முன்னாள் முதல்வர்கள் திக்விஜய் சிங், பூபேஷ் பாகேல் ஆகியோர் புதிய யோசனையை கூறி வருகின்றனர்.

ம.பி.,யில் உள்ள தன் சொந்த தொகுதியான ராஜ்கர் தொகுதியில், 33 ஆண்டுகளுக்கு பின், வரும் லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார், அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங். இத்தொகுதியில் இதுவரை அவர் தோல்வி அடைந்ததே கிடையாது.

384க்கு மேல் தேவை



சமீபத்தில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் திக்விஜய் சிங் கூறுகையில், 'மின்னணு ஓட்டுப்பதிவு முறையை துடைத்தெறிய ஒரே வழி, நீண்ட வேட்பாளர் பட்டியல் வைத்திருப்பது தான். ஒரு தொகுதியில், 384 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியாது' என்றார்.

இவரைத் தொடர்ந்து, சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ்ன் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், 'ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பா.ஜ., கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே, இதை தடுக்க, தொகுதிக்கு 384 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்' என்றார்.

மஹாராஷ்டிராவில் உள்ள விவசாய சங்கமும், இதே யோசனையை முன்வைத்துள்ளது. 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் பா.ஜ.,வின் திட்டம் நிறைவேறக்கூடாது' என, அந்த சங்கம் தெரிவித்து உள்ளது.

நடைமுறை சாத்தியமா?



திக்விஜய் சிங் - பூபேஷ் பாகேல் இந்த திட்டத்தை சொன்னாலும், அவர்களுக்கு பணம் தடையாக இருக்கிறது. 1992 வரை, வேட்புமனு தாக்கலுக்கு டிபாசிட் தொகை, 1,500 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 25,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இதனால், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வைக்க, வேட்பாளர்களை தயார் செய்ய முடியுமா என்ற கேள்விஎழுந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்