ஸ்டாலின் குடும்பத்துடன் ஜாபர் சாதிக் :போஸ்டர்களை கிழித்த போலீசார்

தமிழகத்தை உலுக்கிய போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக்கை, என்.ஐ.ஏ., அதிகாரிகள்ராஜஸ்தானில் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் முன்னாள் முதல்வர் பழனிசாமி, கவர்னர் ரவியைசந்தித்து மனு கொடுத்தார்.

மேலும், போதைப் பொருளை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று மாநிலம் முழுதும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதையொட்டி, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு சார்பில், 'சர்வதேச போதைப்பொருள் மாபியா தலைவனுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு' என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோருடன், ஜாபர் சாதிக் உள்ள படங்கள் அடங்கிய போஸ்டர்கள், மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒட்டப்பட்டன.

தகவல் அறிந்த அந்தந்த வட்டார போலீசார், உடனடியாக சென்று போஸ்டர்களை கிழித்து வீசியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்