Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கவில்லை?

ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கவில்லை?

நிர்வாக திறன்மையின்மையே காரணம்?


செம்மலை, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

அ.தி.மு.க., அரசு, 11 மருத்துவ கல்லுாரிகள் துவக்கினாலும், அவற்றில் மருத்துவமனைக்கான கட்டமைப்புகள் முழுமை பெறாமல் இருந்தன. மத்திய அரசு, 60 சதவீத நிதியை விடுவித்து பணி நடந்தாலும், மாநில அரசின் 40 சதவீத நிதி செலவிடப்படாததால், கட்டமைப்பு பணிகளில் தொய்வு இருந்தது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதேபோல், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லுாரி என்ற வகையில், தி.மு.க., ஆட்சியில், தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார் ஆகிய ஆறு மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, ஆறு மாவட்டங்களிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளன.

இதற்கான நிர்வாக அனுமதி கோரி, பிரதமர், மத்திய சுகாதார அமைச்சரிடம், 10க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று வலியுறுத்தி உள்ளோம். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் முதல்வரும் வலியுறுத்தி உள்ளார்.

இக்கல்லுாரிகள் துவக்க நிலமும், மாநில அரசின் 40 சதவீத நிதியும் தயாராக உள்ளது. மத்திய அரசு நிர்வாக அனுமதி கொடுத்தால், அம்மாவட்டங்களில் விரைந்து மருத்துவ கல்லுாரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.

மத்திய அரசு அனுமதி தரவில்லை!


சுப்பிரமணியன், அமைச்சர், தி.மு.க.,

மருத்துவ கல்லுாரிகளை துவங்க, மாநில அரசு வாயிலாக எவ்வித முன்மொழிவும் வைக்காமல், வாய்மொழியாக கேட்டால் கிடைக்காது. அதை பரிசீலித்து அதில் கூடுதல் விபரங்கள் அல்லது விளக்கம் இருந்தால், மாநில அரசிடம் மத்திய அரசு கேட்கும். இவை அனைத்தும் ஆவணங்கள் வாயிலான பணி. இந்த ஐந்தாண்டுகளில் எத்தனை முறை இதுபோன்று கேட்கப்பட்டதற்கான முன்மொழிவு ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்பதை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

எவ்வித ஆவணங்களும் இன்றி, வாய்மொழியாக சென்று கேட்டால் எதுவும் நடக்காது. மத்திய அரசை சண்டைக்கோழி போல் நடத்தினால், மாநில அரசுக்கான திட்டங்களை எப்படி பெற முடியும்? கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், முறையாக மத்திய அரசின் நிதியை பெற்று வருகின்றன. இங்கு பா.ஜ., இல்லாத முதல்வர் இருந்தாலும், முறைப்படி கேட்டால் அனைத்தும் கிடைக்கும்.

தமிழக அரசு, நிதியை பலவற்றிற்கு வீண் விரயம் செய்துள்ளது. இதனால், மருத்துவ கல்லுாரி கட்டுமானத்துக்கான 40 சதவீத நிதியை கூட செலவிட முடியாத அளவில் உள்ளது. இது, தி.மு.க., அரசின் நிர்வாக திறமையற்ற தோல்வியை காட்டுகிறது. இதை திசை திருப்ப, மத்திய அரசை குறை கூறுவது ஏற்புடையது இல்லை.

தி.மு.க., ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லுாரி கூட துவக்க முடியாதது, அரசின் தோல்வி மட்டுமல்ல, இயலாமையையும் காட்டுகிறது.

Advertisement

மார் 27, 2026 01:38 pm

மாவட்டம் தோறும் மருத்துவமனையிருந்தால் மட்டும் போதாது. துறைமருத்துவர்களும் தேவையானயளவு மருந்துகளும் நர்ஸ்களும் தேவை.

Reply Rate this
மார் 27, 2026 12:54 pm

நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரியில் நரம்பியல் டாக்டர் இல்லை. நரம்பு சம்பந்தமான நோய்க்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி விடுவார்கள்

Reply Rate this
மார் 27, 2026 12:41 pm

ஆமா நாங்க தொடங்கி வெச்சா NEET என்கிற பேரில் வடகங்கள் வந்து OC யில் படிச்சிட்டு போகவா, எடப்பாடி மட்டும் நீட் வாராமல் தடுத்து இருந்தால் இந்த பிரச்சனை இல்லையே

Reply Rate this
ஹலோ 200. நீட் க்கு முன்பும் பிறகும் இங்குள்ள 85 சதவீத இடங்கள் நமது மாநில மாணவர்களுக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. வேறு மாநிலங்களில் உள்ள 15 சதவீத சீட்களிலும் தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள்.
மார் 27, 2026 01:55 pm
Rate this
மார் 27, 2026 09:48 am

நோய் இருந்தால்தானே மருத்துவமனை தேவை. நாங்கள் தான் நோயில்லா தமிழகம் படைத்துக்கொண்டுள்ளோமே.

Reply Rate this
மார் 27, 2026 09:11 am

AIMS பத்தி கேட்கறாங்கோ

Reply Rate this
மார் 27, 2026 07:54 am

படித்துவிட்டு காத்திருக்கும் மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளில் கடுமையான டாக்டர், நர்ஸ், மருந்தாளுநர் ஆயா பற்றாக்குறை.


மருத்துவப் பயனாளிகள் திண்டாடுகிறார்கள். கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் அநாவசியமே. முதலில் இவற்றை சரி செய்யவேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும். இனியும் அது வணிகமாக இருக்கக் கூடாது.

Reply Rate this
மிகவும் சரியான கருத்து
மார் 27, 2026 08:28 am
Rate this
மார் 27, 2026 07:51 am

ஹி..ஹி.. மாவட்டத்துக்கு ஒரு எய்ம்ஸ் வரும்னு எதிர்பாத்தோம்

Reply Rate this
மார் 27, 2026 07:22 am

முதலில் இருக்கும் புதிய 11 மருத்துவ கல்லூரிக்கு உள் கட்டமைப்பை மேம்படுத்தினாலே போதும்.

Reply Rate this